சிவலிங்கங்களைப் பற்றிய டாக்டர் “விளாதி மீரின் ஆராய்ச்சி மிக வித்தியாசமானது”
Labels: ”மெய்ப்பொருள்"
"மஹா அவதார் பாபாஜி பிறந்தாநாள் விழா"
கார்த்திகை மாதம் ரோகினி நட்சத்திரம் (06-12-2014), இமயமலையிலும் (அன்புள்ள இதயங்களிலும்) மேவும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இன்னும் இளமையோடு வாழ்ந்து கொண்டு இருக்கும் க்ரியா யோக பரம் குரு "மஹா அவதார் பாபாஜி" அவர்களுக்கு பிறந்தாநாள் விழா, பாபாஜி ஐயா உதித்த இடமான பரங்கிபேட்டையில் கொண்டாடப்படுகிறது.
அனைவரும் இந்த நன்னாளில் பாபாஜி ஐயாவை வணங்கி, பெரியவரின் அருளாசியை பெறுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்.
இடம் காண இங்கே சொடுக்கவும் :
http://www.puduvaisiththargal.com/2010/11/blog-post_25.html
திரு அண்ணாமலை திருத்தலம் - .
அண்ணாமலை எம் அண்ணா போற்றி!..
கண்ணார் அமுதக் கடலே போற்றி!
-
"உண்ணாமுலை உமையாளொடும் உடனாகிய ஒருவன்
பெண்ணாகிய பெருமான்மலை திருமாமணி திகழ
மண்ணார்ந்தன அருவித்திரள் மழலைம் முழவதிரும்
அண்ணாமலை தொழுவார்வினை வழுவாவண்ணம் அறுமே."
-
கார்த்திகை நாளின் மாலைப் பொழுதில் தம் இல்லத்திலும் திருக்கோயில்களிலும்
அகல் விளக்குகளை அழகுற ஏற்றி வைத்து ஆராதனை செய்வதைப் பெரும் பேறெனக்
கொள்வர்.
அணிதிகழ் அகல் விளக்கொளியில் அகமும் புறமும் மகிழ்வுறும் அற்புதத் திருநாள் இந்த நன்னாள், எதிர்வரும் 05-12-2014. வெள்ளிக்கிழமை கூடி வருகின்றது.
திருக்கார்த்திகைத் திருநாள் பூவுலகில் அக்னி மலையாகத் திகழும் அண்ணாமலைக்கே உரித்தானது.
திருக்கார்த்திகை நாளினை பத்தாம் திருவிழாவாகக் கொண்டு அருணாசலம் எனப்படும் அண்ணாமலையில் 26-11-2014 கோலாகலமாகக் கொடியேற்றம் நிகழ்கின்றது.
எண்ணற்ற பெருமைகளுடன் திகழும் திருத்தலம் - திரு அண்ணாமலை.
ஈசன் மலை வடிவாகத் திகழ்கின்றனன் என்பர் பெரியோர்.
அப்பர் ஸ்வாமிகளும் ஞானசம்பந்தப்பெருமானும் பாடிப் பரவிய திருத்தலம்.
மாணிக்கவாசகப் பெருமான் போற்றித் துதித்த திருத்தலம்.
எத்தனை எத்தனையோ சித்தர்களும் மகான்களும் வாழ்ந்த திருத்தலம்.
இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கும் திருத்தலம்.
வாழ்வில் தடம் மாறிச் சென்றதால் தடுமாறித் தவித்த அருணகிரி தமிழ்க் குமரனின் திருவருளால் மீண்டும் தலை நிமிர்ந்து துலங்கி நின்ற திருத்தலம்.
அருணகிரிநாதர் அமுதத் தமிழில் திருப்புகழ் மொழிந்த திருத்தலம்.
இன்னும் அறியப்படாத எண்ணற்ற ரகசியங்களுடன் - 2668 அடி உயரத்துடன் திகழும் அண்ணாமலையைச் சுற்றிலும் பல்வேறு தீர்த்தங்களும் சந்நிதிகளும் விளங்குகின்றன. அவற்றுள் அஷ்ட லிங்க சந்நிதிகளும் அடி அண்ணாமலை திருக்கோயிலும் வெகு சிறப்பானவை.
அண்ணாமலையின் கிரிவலப் பாதை 14 கி.மீ. சுற்றளவினை உடையது.
ஒவ்வொரு மாதமும் பௌர்ணமி அன்று கிரிவலம் வருவதை லட்சக் கணக்கான பக்தர் பழக்கமாகக் கொண்டிருக்கின்றனர்.
திருஅண்ணாமலையை வலம் வருவது பெரும் புண்ணியம் எனப்படுகின்றது.
இத்திருத்தலத்தில் - திருக்கார்த்திகைத் திருவிழாவின் தொடக்கமாக -23.11.2014 அன்று அண்ணாமலையின் காவல் நாயகி ஆகிய ஸ்ரீதுர்காம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிகழ்ந்தன. அன்றிரவு - ஸ்ரீ துர்காம்பிகை காமதேனு வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.
24.11.2014 அன்று திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பிடாரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளுடன் உற்சவ வழிபாடுகள் நிகழ்ந்தன. அன்றிரவு ஸ்ரீபிடாரி அம்மன் சிம்ம வாகனத்தில் திருவீதி எழுந்தருளினாள்.
அதன் பின் 25.11.2014 அன்று விநாயகப்பெருமானுக்கு உற்சவ வழிபாடு நடத்தப் பெற்று ஸ்வாமி மூஷிக வாகனத்தில் திருவீதி எழுந்தருளினார்.
இன்று (26.11.2014) கார்த்திகைத் திருவிழாவின் முதல் நாளாக காலை 6.05 மணிக்கு மேல் 7.25 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் திருக் கொடியேற்றம்.
அண்ணாமலையாரின் திருக்கோயிலின் 72 அடி உயர கொடிமரத்தில் ரிஷபக் கொடியேற்றப்பட்டது.
#முதல்_திருநாள் - 26.11.14 - புதன் கிழமை காலை - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல் - வெள்ளி விமானங்கள். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
ஸ்வாமி - வெள்ளி அதிகார நந்தி வாகனம். அம்பாள் - ஹம்ஸ வாகனம்.
#இரண்டாம்_திருநாள் - 27.11.14 - வியாழக்கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - சூர்ய பிரபை. இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி இந்திர விமானங்கள்
.
#மூன்றாம்_திருநாள் - 28.11.14 - வெள்ளிக்கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - பூத வாகனம். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி அன்ன வாகனம்.
#நான்காம்_திருநாள் - 29.11.14 - சனிக்கிழமைகாலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - நாக வாகனம். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி காமதேனு, கற்பக விருட்சம்.
#ஐந்தாம்_திருநாள் - 30.11.14 - ஞாயிற்றுக்கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி ரிஷப வாகனம். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரிஷப வாகனம்.
#ஆறாம்_திருநாள் - 01.12.14 - திங்கட்கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி யானை வாகனம்.அறுபத்து மூவர் எழுந்தருளல்.
இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். வெள்ளி ரதம், வெள்ளி விமானம்.
#ஏழாம்_திருநாள் - 02.12.14 - செவ்வாய்க்கிழமை காலை ஆறு மணிக்கு மேல் ஏழு மணிக்குள் திருத்தேர் வடம் பிடித்தல். பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். மகா ரதம். திருத்தேரோட்டம்.
#எட்டாம்_திருநாள் - 03.12.14 - புதன் கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - வெள்ளி விமானம். மாலை நான்கு மணிக்கு பிக்ஷாடனர் எழுந்தருளல். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல். குதிரை வாகனம்.
#ஒன்பதாம்_திருநாள் - 04.12.14 - வியாழக்கிழமை காலை - விநாயகர் - சந்திர சேகரர் புறப்பாடு - கண்ணாடி விமானம். இரவு - பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளல்.
கையிலாய திருக்கோலம். காமதேனு வாகனம்.
#பத்தாம்_திருநாள் - 05.12.14 - வெள்ளிக்கிழமை அதிகாலை நான்கு மணிக்கு பரணி தீபம். மாலை அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளி திருநடனம். மாலை ஆறு மணிக்கு திருக்கார்த்திகை - ஜோதி தரிசனம். இரவு - தங்க ரிஷப வாகனம்.
06.12.14 - சனிக்கிழமை அதிகாலை சந்திரசேகரர் கிரிவலம் எழுந்தருளல்
இரவு - தெப்ப உற்சவம்.
07.12.14 - ஞாயிற்றுக்கிழமை இரவு - அம்பாள் தெப்ப உற்சவம்.
08.12.14 - திங்கட்கிழமை இரவு - சுப்ரமணியர் தெப்ப உற்சவம்.
09.12.14 - செவ்வாய்க்கிழமை இரவு - விநாயகர் - வெள்ளி மூஷிகம். சண்டிகேஸ்வரர் - வெள்ளி ரிஷபம். தீபத் திருவிழாவினை முன்னிட்டு - நகர் முழுதும் விழாக் கோலம் கொண்டுள்ளது. அண்ணாமலையார் திருக்கோயில் வளாகம் ஒளிமயமாக விளங்குகின்றது.
ஒன்பது திருக்கோபுரங்களும் தங்கக் கொடிமரமும் சந்நிதிகளும் தல விருட்சமான மகிழ மரமும் பல வண்ண மின் விளக்குகளால் ஒளிர்கின்றன.
தேடி நின்ற நான்முகனும் திருமாலும் அறியும் வண்ணம் - லிங்கோத்பவராக அடிமுடி அறிய இயலாதபடி ஜோதி வடிவாக ஈசன் வெளிப்பட்ட திருத்தலம்.
நினைக்க முக்தி தரும் திருத்தலம்.
பஞ்ச பூதத் திருத்தலங்களுள் அக்னி ஸ்வரூபம்.
தமிழகத்தின் அனைத்து சிவாலயங்களிலும் சிற்றம்பலத்தில் ஸ்ரீநடராஜர் விளங்குவது போல திருக்கோஷ்டத்தில் லிங்கோத்பவராக அண்ணாமலையார் விளங்குகின்றார்.
தேவாரத் திருப்பதிகங்கள் பெற்ற நடுநாட்டுத் திருத்தலங்கள் இருபத்து இரண்டனுள் தலையாயது - திருஅண்ணாமலை
-
"தேடிச் சென்று திருந்தடி ஏத்துமின்
நாடி வந்தவர் நம்மையும் ஆட்கொள்வர்
ஆடிப் பாடி அண்ணாமலை கை தொழ
ஓடிப் போகும் நமது உள்ள வினைகளே!.."
***** ஓம் நம சிவாய சிவாய நம ஓம் *****
வாரியார் சுவாமிகள்
ஒரு சமயம் வாரியார் சுவாமிகள் ரயிலில் பயணித்துக் கொண்டிருந்தார். காலையில் கண் விழித்து எழுந்தவர், கை,கால், முகம் கழுவித்துடைத்துக் கொண்டு வந்து, தன் இருக்கையில் அமர்ந்து, திருநீற்றைக் கை நிறைய எடுத்துத் தன் நெற்றி நிறையப் பூசிக் கொண்டார்.
அவர் எதிரில் அமர்ந்திருந்த இளைஞன், நக்கலாகக் கேட்டான். ‘‘பெரியவரே, ஏன் நெற்றிக்கு வெள்ளை அடிக்கின்றீர்?”.
வாரியார் சுவாமிகள் வேறு யாராவது பணிவாகத் திருநீறு பூசுவதைப்பற்றிக்
கேட்டிருந்தால், திருநீற்றின் அருமை, பெருமைகளைப் பற்றி அற்புதமாக விளக்கம்
கொடுத்திருப்பார்.
ஆனால் இந்த மாதிரி நக்கலடிக்கும் ஆசாமிகளுக்கு
எப்படிப் பதில் சொல்வது? அல்லது எடுத்துச் சொன்னால்தான் விளங்கப் போகிறதா?
கேட்டுக் கொள்ளப் போகிறார்களா?.
வாரியார் சுவாமிகள் அவனை பார்த்து, ‘‘தம்பி, குடியிருக்கும் வீட்டிற்குத்தான் வெள்ளையடிப்பார்கள். என் நெற்றிக்குள் இறையன்பு குடியிருக்கின்றது. நல்லுணர்வுகள் குடியிருக்கின்றன. ஆகவேதான் வெள்ளையடித்தேன். காலி வீட்டிற்கு யாரும் அடிக்கமாட்டார்கள்,’’ என்று அவன் மொழியிலேயே அவனுக்கு பதில் சொன்னார்.
Labels: வாரியார் சுவாமிகள்
விவேகம் உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது உலக தர்ம நியதி.
வேண்டாம் இந்தச் சூதாட்டம்’
என்று தடுத்திருக்கலாம் அல்லவா? ஏன் அப்படிச்
செய்யவில்லை கிருஷ்ணன்..?!
பகவான் கிருஷ்ணனின் குழந்தைப் பருவம்
முதலே,
அவருக்குப்
பணிவிடைகள்
செய்து,
தேரோட்டி,
பல்வேறு
சேவைகள்
புரிந்தவர்
உத்தவர்.
இவர்
தனது
வாழ்நாளில்,
தனக்கென
நன்மைகளோ
வரங்களோ
கண்ணனிடம்
கேட்டதில்லை.
துவாபரயுகத்தில்,
தமது
அவதாரப்
பணி
முடித்து
விட்ட
நிலையில்,
உத்தவரிடம்
ஸ்ரீகிருஷ்ணர்,
"உத்தவரே,
இந்த
அவதாரத்தில்
பலர்
என்னிடம்
பல
வரங்களும்,
நன்மைகளும்
பெற்றிருக்கின்றனர்.ஆனால்,
நீங்கள்
எதுவுமே
கேட்டதில்லை.
ஏதாவது
கேளுங்கள்,
தருகிறேன்.
உங்களுக்கும்
ஏதாவது
நன்மைகள்
செய்துவிட்டே,
எனது
அவதாரப்
பணியை
முடிக்க
நினைக்கிறேன்"
என்றார்.
தனக்கென எதையும் கேட்காவிட்டாலும்,
சிறு வயது முதலே கண்ணனின்
செயல்களைக்
கவனித்து வந்த உத்தவருக்கு, சொல்
ஒன்றும்,
செயல் ஒன்றுமாக இருந்த கண்ணனின் லீலைகள்,
புரியாத புதிராக இருந்தன. அவற்றுக்கான
காரண, காரியங்களைத் தெரிந்து கொள்ள
விரும்பினார். "பெருமானே! நீ வாழச் சொன்ன
வழி வேறு; நீ வாழ்ந்து
காட்டிய வழி வேறு! நீ
நடத்திய மகாபாரத நாடகத்தில், நீ
ஏற்ற
பாத்திரத்தில், நீ புரிந்த செயல்களில்,
எனக்குப்
புரியாத விஷயங்கள் பல உண்டு.
அவற்றுக்கெல்லாம் காரணங்களை அறிய
ஆவலாக இருக்கிறேன். நிறைவேற்றுவாயா?"
என்றார் உத்தவர்.
உத்தவர் கேட்க ஆரம்பித்தார்: "கண்ணா!
முதலில்
எனக்கு ஒரு விளக்கம் வேண்டும்.கிருஷ்ணா! நீ
பாண்டவர்களின் உற்ற நண்பன். உன்னை
அவர்கள்
ஆபத்பாந்தவனாக, பரிபூரணமாக நம்பினார்கள்.
நடப்பதை மட்டுமல்ல; நடக்கப் போவதையும்
நன்கறிந்த ஞானியான நீ, 'உற்ற
நண்பன் யார்’
என்பதற்கு நீ அளித்த விளக்கத்தின்பட,
முன்னதாகவே சென்று, 'தருமா! வேண்டாம்
இந்தச் சூதாட்டம்’ என்று தடுத்திருக்கலாம்
அல்லவா? ஏன் அப்படிச் செய்யவில்லை?போக
ட்டும். விளையாட ஆரம்பித்ததும், தருமன்
பக்கம்
அதிர்ஷ்டம் இருக்கும்படி செய்து,
வஞ்சகர்களுக்கு நீதி புகட்டியிருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை. தருமன்
செல்வத்தை இழந்தான்; நாட்டை இழந்தான்;
தன்னையும் இழந்தான். சூதாடியதற்குத்
தண்டனையாக,
அதோடு அவனை விட்டிருக்கலாம்.
தம்பிகளை அவன் பணயம் வைத்த
போதாவது, நீ
சபைக்குள் நுழைந்து தடுத்திருக்கலாம்.
அதையும் நீ செய்யவில்லை.
'திரௌபதி அதிர்ஷ்டம் மிக்கவள். அவளைப் பணயம்
வைத்து ஆடு. இழந்தது அனைத்தையும்
திருப்பித் தருகிறேன்’ என்று சவால் விட்டான்
துரியோதனன். அப்போதாவது, உனது தெய்வீக
சக்தியால், அந்த பொய்யான பகடைக்
காய்கள்
தருமனுக்குச் சாதகமாக
விழும்படி செய்திருக்கலாம். அதையும்
செய்யவில்லை. மாறாக, திரௌபதியின்
துகிலை உரித்து, அவளின் மானம் பறிபோகும்
நிலை ஏற்பட்ட போதுதான் சென்று,
';துகில்
தந்தேன், திரௌபதி மானம் காத்தேன்’
என்று மார்தட்டிக் கொண்டாய். மாற்றான்
ஒருவன், குலமகள் சிகையைப்
பிடித்து இழுத்து வந்து, சூதர்
சபையில் பலர்
முன்னிலையில், அவள் ஆடையில் கை
வைத்த
பிறகு, எஞ்சிய மானம் என்ன
இருக்கிறது?
எதனைக் காத்ததாக நீ பெருமைப்படுகிறாய்?
ஆபத்தில் உதவுபவன்தானே ஆபத் பாந்தவன்? இந்த
நிலையில் உதவாத நீயா ஆபத்பாந்தவன்?
நீ
செய்தது தருமமா?';'; என்று கண்ணீர் மல்கக்
கேட்டார் உத்தவர்.
இது உத்தவரின் உள்ளக் குமுறல் மட்டுமன்று;
மகாபாரதம் படித்துவிட்டு நாம்
அனைவருமே கேட்கும் கேள்விகளே இவை.
நமக்காக இவற்றை அன்றே கண்ணனிடம்
கேட்டிருக்கிறார் உத்தவர்.
பகவான் சிரித்தார். "உத்தவரே! விவேகம்
உள்ளவனே ஜெயிக்க வேண்டும் என்பது
உலக தர்ம
நியதி. துரியோதனனுக்கு இருந்த விவேகம்
தருமனுக்கு இல்லை. அதனால்தான் தருமன்
தோற்றான்" என்றான் கண்ணன். உத்தவர்
ஏதும்
புரியாது திகைத்து நிற்க, கண்ணன்
தொடர்ந்தான்.
"துரியோதனனுக்கு சூதாடத் தெரியாது.
ஆனால், பணயம் வைக்க அவனிடம்
பணமும்,
ஏராளமான ஆஸ்தியும் இருந்தது. 'பணயம் நான்
வைக்கிறேன். என் மாமா சகுனி,
பகடையை உருட்டிச் சூதாடுவார்’ என்றான்
துரியோதனன். அது விவேகம்.தருமனும்
அதுபோலவே விவேகத்துடன் செயல்பட்டு,
'நானும் பணயம் வைக்கிறேன். ஆனால்,
என்
சார்பாக என் மைத்துனன் ஸ்ரீகிருஷ்ணன்
பகடைக்காயை உருட்டுவான்'
என்று சொல்லியிருக்கலாமே? சகுனியும்
நானும் சூதாடியிருந்தால், யார்
ஜெயித்திருப்பார்கள்? நான் கேட்கும்
எண்ணிக்கைகளைச் சகுனியால் பகடைக்
காய்களில் போடத்தான் முடியுமா? அல்லது,
அவன் கேட்கும் எண்ணிக்கைளை என்னால்தான்
போட முடியாதா? போகட்டும். தருமன்
என்னை ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ள
மறந்துவிட்டான்
என்பதையாவது மன்னித்து விடலாம். ஆனால்,
அவன் விவேகமில்லாமல் மற்றொரு மாபெரும்
தவறையும் செய்தான். 'ஐயோ! விதிவசத்தால்
சூதாட ஒப்புக்கொண்டேனே! ஆனால், இந்த
விஷயம் ஸ்ரீகிருஷ்ணனுக்கு மட்டும்
தெரியவே கூடாது. கடவுளே! அவன்
மட்டும்
சூதாட்ட மண்டபத்துக்கு வராமல் இருக்க
வேண்டும்’ என்றுவேண்டிக் கொண்டான்.
என்னை மண்டபத்துக்குள் வர முடியாதவாறு,
அவனே கட்டிப் போட்டுவிட்டான். நான்
அங்கு வரக் கூடாதென
என்னிடமே வேண்டிக்கொண்டான
்.யாராவது தனது
பிரார்த்தனையால் என்னைக்
கூப்பிட மாட்டார்களா என்று மண்டபத்துக்கு வெளியில்
காத்துக்கொண்டு நின்றேன்.பீமனையும்,
அர்ஜுனனையும், நகுல- சகாதேவர்களையும்
வைத்து இழந்தபோது, அவர்களும்
துரியோதனனைத் திட்டிக் கொண்டும், தங்கள்
கதியை எண்ணி நொந்து கொண்டும்
இருந்தார்களே தவிர, என்னைக் கூப்பிட
மறந்துவிட்டார்களே!
அண்ணன் ஆணையை நிறைவேற்ற துச்சாதனன்
சென்று, திரௌபதியின் சிகையைப்
பிடித்தபோது, அவளாவது என்னைக்
கூப்பிட்டாளா? இல்லை. அவளும்
தனது பலத்தையே நம்பி, சபையில் வந்து,
வாதங்கள்செய்து கொண்டிருந்தாளே ஒழிய,
என்னைக் கூப்பிடவில்லை! நல்லவேளை..
துச்சாதனன் துகிலுரித்த போதும்
தனது பலத்தால் போராடாமல், 'ஹரி... ஹரி...
அபயம் கிருஷ்ணா! அபயம்’ எனக் குரல்
கொடுத்தாள் பாஞ்சாலி. அவளுடைய
மானத்தைக் காப்பாற்ற அப்போதுதான்
எனக்கு சந்தர்ப்பம் கிடைத்தது. அழைத்ததும்
சென்றேன். அவள் மானத்தைக் காக்க
வழி செய்தேன். இந்தச் சம்பவத்தில் என்
மீது என்ன
தவறு?" என்று பதிலளித்தான் கண்ணன்.
"அருமையான விளக்கம் கண்ணா!
அசந்துவிட்டேன். ஆனால், ஏமாறவில்லை.
உன்னை இன்னொரு கேள்வி கேட்கலாமா?"
என்றார் உத்தவர்.
"கேள்" என்றான் கண்ணன்.
"அப்படியானால், கூப்பிட்டால்தான் நீ
வருவாயா? நீயாக, நீதியை நிலை
நாட்ட,
ஆபத்துகளில் உன் அடியவர் களுக்கு
உதவ
வரமாட்டாயா?" புன்னகைத்தான் கண்ணன்.
"உத்தவா, மனித வாழ்க்கை அவரவர்
கர்ம
வினைப்படி அமைகிறது. நான்
அதை நடத்துவதும் இல்லை; அதில்
குறுக்கிடுவதும் இல்லை. நான் வெறும்
'சாட்சி பூதம்’. நடப்பதையெல்லாம் அருகில்
நின்று பார்த்துக்கொண்டு நிற்பவனே!
அதுதான் தெய்வ தர்மம்" என்றான்.
"நன்றாயிருக்கிறது கிருஷ்ணா!
அப்படியானால், நீ அருகில் நின்று,
நாங்கள்
செய்யும் தீமைகளையெல்லாம் பார்த்துக்
கொண்டிருப்பாய். நாங்கள் தவறுகளைத்
தொடர்ந்து செய்து கொண்டேயிருந்து பாவங்களைக்
குவித்து, துன்பங்களை அனுபவித்துக்
கொண்டே இருக்க வேண்டும். அப்படித்தானே?"
என்றார் உத்தவர்.
"உத்தவரே! நான் சொன்ன வாசகங்களின்
உட்பொருளை நன்றாக உணர்ந்து பாருங்கள்.
நான் சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை நீங்கள்
உணரும் போது, உங்களால்
தவறுகளையோ தீவினைகளையோ நிச்சயமாகச்
செய்ய முடியாது. அதை நீங்கள் மறந்துவிடும்
போதுதான், எனக்குத் தெரியாமல் செயல்களைச்
செய்துவிடலாம் என்று எண்ணுகிறீர்கள்.
பாதிப்புக்கு உள்ளாக்கும் சம்பவங்கள்
நிகழ்வதும் அப்போதுதான். எனக்குத்
தெரியாமல் சூதாடலாம் என்று தருமன்
நினைத்தானே, அதுதான் அவனது அஞ்ஞானம்.
நான் சாட்சி பூதமாக எப்போதும்,
எல்லோருடனும் இருப்பவன் என்பதை தருமன்
உணர்ந்திருந்தால், இந்த சூதாட்ட
நிகழ்ச்சி வேறு விதமாக முடிந்திருக்கும்
அல்லவா?" என்றான் ஸ்ரீகிருஷ்ணன்.
உத்தவர் வாயடைத்து, பக்திப் பரவசத்தில்
ஆழ்ந்தார். ஆகா! எத்தனை ஆழமான
தத்துவம்!
எத்தனை உயர்ந்த சத்யம்!பகவானைப்
பூஜிப்பதும்,
பிரார்த்தனை செய்வதும்,
அவனை உதவிக்கு அழைக்கும் ஓர்
உணர்வுதானே! "அவனின்றி ஓர் அணுவும்
அசையாது" என்ற நம்பிக்கை வரும்போது,
அவன்
சாட்சி பூதமாக அருகில்
நிற்பதை எப்படி உணராமல் இருக்க
முடியும்?
அதனை மறந்துவிட்டு எப்படிச் செயலாற்ற
முடியும்? இந்த தத்துவத்தைதான்
பகவத்கீதை முழுவதிலும் கண்ணன்
அர்ஜுனனுக்கு உபதேசித்தான்.
அர்ஜுனனுக்காகத் தேரைச்
செலுத்தி வழிநடத்தினானே தவிர, அர்ஜுனன்
இடத்தில் தானே நின்று அவனுக்காகப்
போராடவில்லை
Mahabharatham - மகாபாரதம்
Labels: ஆன்மா