சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
Adaikkalam Kaththan – அடைக்கலம் காத்தான்
Labels: சிவனின் 1000 தமிழ்ப் பெயர்கள்
திருமந்திரம்
பிறப்பிலி பிஞ்ஞகன் பேரரு ளாளன்
இறப்பிலி யாவர்க்கும் இன்பம் அருளும்
துறப்பிலி தன்னைத் தொழுமின் தொழுதால்
மறப்பிலி மாயா விருத்தமும் ஆமே....திருமூலர்
பொருள் :
சிவன் பிறப்பில்லாதவன்; பின்னிய சடையுடையவன்; பேரறிவாளன்;இறப்பில்லாதவன்;
யாவர்க்கும் இன்பம் அருளி அவர்களை துறக்காதிருப்பவன். அவனைத் தொழுங்கள்.
அப்படி தொழுதால் உங்களை என்றும் மறவாதிருப்பவன். மாயைக்கு எதிரான
பேரறிவினன் அவன்.
Labels: ”மெய்ப்பொருள்" , திருமந்திரம்
ஆதிகுரு தட்சிணாமூர்த்தி
எல்லாம் வல்ல இறைவன் முதன் முதலில்
உயிர்களுக்கு தன்னை அடைய வழி காட்டி முதல் குருவாக – ஆதி குருவாக வந்த
திறத்தினையும் அவர் கூறி அருளிய மோன உபதேசத்தினையும் இக்கட்டுரையில் காண்போம்.
புராதன காலத்தில் பிரம்ம புத்திரர்கள் நால்வர் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்கியவர்கள் பூரணத்துவம் பெறாமல் தவித்தனர்.
எல்லாம் வல்லவனை, எங்கும் நிறைந்தவனை, ஆதி அந்தமில்லா அருட் பெருஞ்ஜோதியினை, பரம் பொருளை, பிரபஞ்சகர்த்தாவை, ஒவ்வொரு அணுவுக்குள்ளும் அணுவாக ஒளிர்பவனை அறியவெண்ணாமல் வழி தெரியாமல் பரிதவித்தனர். வேண்டினர் பரமாத்மனிடம், மனம் உருகினர் மன்பதை உய்ய வழியை நாடி! தவித்தனர் செய்வதறியாமல்.
சனகாதிகளின் தவிப்பை உணர்ந்த சர்வேஸ்வரன் அருள்புரிய திருஉளம் கொண்டார். சனகாதி முனிவர்கள் முன் தோன்றினார். திடீரென்று தங்கள் முன் ஒரு உருவம் தோன்றியதை கண்டு திகைத்து நின்றனர்.
பரம்பொருளை – கடவுளை காண விரும்பினோமே. இப்படி ஒரு உருவம் முன் இருக்கிறதே! ஏன்? யார்? எதற்கு? என மிகவும் ஆச்சர்யத்துடன் தங்களுக்குள் வினவிக் கொண்டனர்.
கல்வி கேள்விகளில் கற்றுத் தேர்ந்த சனகாதிகள் ஒருவாறு யூகித்து அறிந்தனர். நாம் கடவுளை காண விரும்பினோமே, திடீரென்று தோன்றிய இவ்வுருவம் ஒன்றும் கூறாமல் நம்முன் இருக்கிறதே! கடவுளை காண அந்த கடவுளே நமக்கு வழிகாட்டத்தான் வந்த்திருக்கிறார் என யூகித்து அறிந்தனர்.
கடவுளை எல்லாம் கடந்தவனை அவ்வளவு எளிதில் காண முடியுமா என்ன? நாம் அதற்கு பக்குவமாக இருக்க வேண்டாமா? சனகாதிகளுக்கே இறைவன் நேரடியாக அருள்புரியவில்லை!?
சர்வமும் அறிந்த சனகாதி முனிவர்களுக்கு, அதன் மூலம் உலகுக்கே, இறைவன் முதன் முதலாய் குருவாக வந்து காட்சி கொடுத்து மோன உபதேசம் அருளினான்.
தன்னை அடைய குரு உபதேசம் பெற வேண்டியதன் முக்கியதுவத்தை இறைவனே சனகாதி முனிவர்களுக்காக தட்சிணா மூர்த்தியாக காட்சி கொடுத்தார். அதன் மூலம் மீட்சி பெற வழிகாட்டினார்.
தங்கள் முன் பேசாமல் , பாதி கண் திறந்த நிலையில் இடக்காலை மடக்கி வலக்காலை ஊன்றி அசுரனை மிதித்த நிலையில் கல்லால் மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் பகவானை கண்டனர். ஒரு கையில் தீயும் ஒருகையில் உடுக்கையும் ஒரு கையில் வேதமும் ஒரு கை சின்முத்திரையுடன் அருளும் நிலையும் இருக்கக் கண்டனர். நாற்கரமும் கண்டனர்.
சடா மகுட சிரசின் வலப்பக்கம் சூரியன், இடப்பக்கம் சந்திர பிறையுடன் , சாந்தம் தவழும் புன்னகை தவழும் அழகிய முகமும் கண்டனர். யோசித்தனர் – யுகித்தனர் ஒருவாறு உண்மையை உணர்ந்து கொண்டனர். அது என்ன?
ஆதிகுரு தட்சிணாமுர்த்தி தங்கள் முன் தோன்றியுள்ளது. தென் திசையான எமனிடமிருந்து மீள, மரணமில்லாத பேரின்ப பெருவாழ்வு பெற தென்திசை நோக்கி இருக்கும் ஆதி குரு தட்சிணாமுர்த்தியை நோக்கி நாம் வடதிசை நோக்கி அமரவேண்டும். தட்சிண பாகத்தை தென்திசையை நோக்கி அமர்ந்த மூர்த்தம் ஆனதால் தட்சிணாமுர்த்தி என்றனர் சனகாதி முனிவர்கள்.
ஆதிகுரு தட்சிணாமுர்த்தி ஒன்றும் பேசாமல் இருப்பதால் நாமும் ஒன்றும் பேசாது மௌனமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தனர். இதுவே மோன நிலை.
இறைவன் தீயை சுமந்து தான் தீயாக அக்னியாக ஜோதி சொருபமாக இருப்பதாய் உணர்த்தினார். அது மட்டுமல்ல ஒளியான அவனோடு உடுக்கை ஒலி, ஓங்காரம் நாதமும் இருப்பதாகவும் உணர்த்துகிறார். அதாவது ஒளியும், ஒலியுமாக விந்து நாதமாக இருப்பவன்.
மற்றொரு கையிலுள்ள வேதங்கள் சொல்வது இதை தான். தட்சிணாமூர்த்தியான இறைவன் பற்றியும் , அவனை அடைய வழியுமே. நான்காவது கை அருள்பொழியும் சின்முத்திரை தாங்கிய கை.
ஒலி சேர்ந்த ஒளியாக பரம்பொருள் சின்முத்திரையில் உள்ளார். சின்முத்திரை அறிந்து உணர்ந்து தவம் செய்க.
கண்ணை திறந்து பேசாது “சும்மா இரு” என்பதுவே தட்சிணாமுர்த்தி ஆதிகுரு சொல்லாமல் உணர்த்திய ஞான இரகசியம். வேதங்கள் சொல்லும் மறைபொருள், ஞான இரகசியம்! பரம்பொருளான இறைவன் பேரொளியானவர். ஒளியோடு ஒலியும் இணைந்துள்ளது. அது மனித தேகத்தில் சின்முத்திரையில் உள்ளது. சின்முத்திரை பிடித்தால் சும்மா இருந்தால் நாம் இறைவனை அடையலாம். சனகாதி முனிவர்கள் அறிந்தனர். உணர்ந்தனர். அடைந்தனர். உய்தனர்.
இதில் முக்கியமானது சின்முத்திரை. இதுதான் – மனித தேகத்தில் இறைவன் துலங்கும் இடம். நாம் தவம் செய்ய வேண்டிய ஸ்தலம். சும்மா இருக்க வேண்டிய இடம். இறைவன் தன் வலதுகை பெருவிரலில் மத்தியிலுள்ள கோட்டை ஆள்காட்டிவிரலால் மடக்கி தொட்டு , மற்ற விரலை நீட்டியபடி அருள்பாலிக்கிறார்.
சபரி மலை அய்யபனும் இந்த சின்முத்திரை காட்டியே அருள்புரிகிறார். சின்முத்திரை வைத்தபடியே கையை புரட்டி பார்த்தல் ஆள்காட்டிவிரலும் கட்டைவிரலும் கூடிய பகுதியானது நமது கண்போலவே தோன்றும். கட்டை விரலின் மேல் நுனியிலிருந்து ஆள்காட்டி விரல் தொட்டு உள்ள கோடு வரையிலுள்ள இடமே நம் கண் அளவு. ஆக சின்முத்திரை என்பது “கண்” என்பதை மறைமுகமாக பரிபாசையாக சூட்சமமாக யூகித்து அறிந்து கொள்ள வேண்டியே சொல்லப்பட்டது. உணர்த்தப்பட்டது.
கடோபநிசத்தில் நசிகேதன், மனித தேகத்தில் இறைவன் இருக்கும் இடம் யாது? என எமதர்மரஜனிடம் வினவ, அதற்கு எமன், இறைவன் கட்டை விரல் அளவான இடத்தில் புகை இல்லாத ஜோதியாக விளங்குகிறான் என்று பதில் கூறுகிறார். இதுவே ஆதாரம் இதற்கு.
நம் உடலில் கட்டைவிரல் அளவான இடம் என பரிபாசையாக கூறப்பட்டது நமது கண்ணையே. பேரொளியான அருட்பெரும் ஜோதியான இறைவன் புகையில்லாத ஜோதி. நம் கண்மணி உள் இருக்கும் சுயம் ஜோதி. எவ்வளவு பெரிய ஞான இரகசியம். இது தெரிந்தால் தானே தட்சிணாமூர்த்தி உணர்த்தியது போல கண்ணை திறந்து சும்மா இருந்து தவம் செய்ய முடியும்.
தட்சிணாமுர்த்தியாக ஆதிகுருவாக இறைவன் உணர்த்திய உபதேசம் கண்ணில் ஒளியை உணர்ந்து விழித்து சும்மா இரு என்பதுவே. “சும்மா இரு” என்பதுவே. சனகாதி முனிவர்கள் அதிபுத்திசாலிகள் ஆனதால் அறிவால் அறிந்தனர். ஆதிகுரு சொல்லாமல் சொன்னதால் , அறிவித்ததால் அறிந்து உணர்ந்தனர். இதுவே உண்மை, சத்தியம் என வேதமும் சித்தர்களும் பற்பல ஞானியரும் பறைசாற்றுகிறார்கள்.
சனகாதி முனிவர்களுக்கு மோனமாக உணர்த்திய ஆதிகுரு , அருணகிரிநாதருக்கு, முருகன் ஓர் அந்தணர் வடிவாக வந்து “சும்மா இரு” என்று சொல்லியே காத்தார்.!
இறைவன் நேரடியாக அருளவில்லை. குருவாக உபதேசித்து அருளினார். தன்னை அடைய குரு மிக மிக மிக முக்கியம் என்பதை உணர்த்தி , “சும்மா இரு” எனவும் உபதேசிக்கிறார். சும்மா இருந்து விழித்திருந்து தவம் செய்து பக்குவம் பெற்றவர்க்கே இறைவன் தன்னை காட்டியும் உணர்த்தியும் அரவணைத்தும் ஆட்க்கொள்கிறார். இதுவே ஞான நிலை. மோன நிலை.
விழி தான் ஞானம் பெற ஒரே வழி என்பதை உணர்வீர். விழித்திருந்து தவம் செய்வது ஒன்றே நம் தவம் என்பதையும் உணர்வீர். விழி! விழி!
இன்றைய உலகில் ஜாதகம் பார்க்கும் பலர் குருபெயர்ச்சி பற்றி கூறி குழப்புகிறார்கள். ஜாதகத்தில் உள்ளது நவகிரகங்கள். அதில் உள்ளது குருகிரகம் – பிரகஸ்பதி – தேவகுரு. இந்த குரு தான் பெயர்ச்சி அடைவது. தட்சிணாமூர்த்தியல்ல. நன்றாக புரிந்து கொள்ளுங்கள். நவ கிரகத்தில் ஒன்றான பிரகஸ்பதி – குரு வேறு! ஆதி குரு தட்சிணாமூர்த்தி வேறு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி தான் ஞான குரு. ஆதி குரு தட்சிணாமூர்த்தி உணர்த்தியதே ஞானம். நவ கிரகத்தில் ஒன்றான குரு அல்ல தட்சிணாமூர்த்தி.
ஆதி குருவாம் தட்சிணாமூர்த்தி உணர்த்திய சும்மா இருந்து தவம் செய்து இறைவனை அடையும் உபாயத்தை , எதாவது குரு மூலம் உபதேசம் பெற்று அறிந்து தீட்சை பெற்று உணர்ந்து தவம் செய்பவனே ஞானம் பெற்று அந்த இறைவனை அடைவான். இந்த ஆதி குரு சுட்டிக்காட்டிய விழி வழி தவம் செய்பவரின் பற்பல பிறவிகளில் செய்த கோடி வினைகளையும் இந்த ஆதிகுரு – இறைவன் பார்த்தால் தான் தீரும். ஆதிகுரு நம்முள் இருந்து பார்க்கணும். தட்சிணாமூர்த்தி அருள் கிட்டணும். ஆதிகுருவை அறிய நீ இங்கே ஒரு சற்குருவை பணிந்து உபதேசம் தீட்சை பெறு. தவம் செய்.
எதாவது ஒரு குரு கிடைத்தால் போதும். சீடன் உத்தமனாய் இருந்தால் போதும். குரு எப்படியிருந்தாலும் பரவாயில்லை. அவர் குருதான். சீடன் உத்தமனாயிருந்தால் அந்த ஆதிகுரு தட்சிணாமூர்த்தி அந்த நல்ல சீடனுக்கு வேறு நல்ல சீடனுக்கு வேறு நல்ல குருவை காட்டி இரட்சிப்பார். தீய ஒரு குருவை நாடிடும் சீடனின் நம்பிக்கையே ஆதி குரு தட்சிணாமூர்த்தி சற்குருவை நல்ல ஒரு குருவை பணியச்செய்து தடுத்தாட்க்கொள்வார். தயா பெருந்தகை. ஞான சொருபம். ஆதி குரு.
ஆக குரு வேண்டும். நல்ல குரு வேண்டும். ஆதி குருவை அறிய வேண்டும்.
“குருவின் அடிபணிந்து கூடுவதல்லார்க்கு அருவமாய் நிற்கும் சிவம்.”

Labels: ”மெய்ப்பொருள்"
கந்த சஷ்டி விரதம்
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம்.
முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம். முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது.
முருகப்பெருமானுக்கும் சூரபதுமன் முதலான அசுர சேனைகளுக்கும் போர் நடந்தது. தேவர்கள் போர் நடந்த அந்த ஆறு நாட்களும் முருகப்பெருமானை வாழ்த்தி வணங்கினர். அந்த ஆறு நாட்களே கந்த சஷ்டி விரதமாகக் கொண்டாடப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி என்ற 14-ம் நாளில் தீபாவளி வருகிறது. அன்று நரக சதுர்தசி ஸ்னானம் என்று தீபாவளி கங்கா ஸ்னானம் செய்கிறோம். மறுநாள் அமாவாசை வருகிறது. இதற்குப் பிறகு வரும் வளர்பிறையில் பிரதமை, துவிதியை, த்ருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி எனும் ஆறு நாட்களில் உமிழ்நீரும் உள்ளே விழுங்காதபடி கந்த சஷ்டி விரதம் அனுஷ்டிக்கப்படுகிறது.
விரதத்திற்கு முதல் நாளன்றே வீட்டினை கழுவி சுத்தப்படுத்தி மஞ்சள் நீர் தெளித்தல் அவசியம். மறுநாள் வரும் பிரதமையன்று அதிகாலை எழுந்து தண்ணீரில் அறுகோணம் வரைந்து அதில் சடாட்சர மந்திரம் எழுதி இடையே பிரணவம் எழுதி, அந்தத் தண்ணீரைச் சிவகங்கையாகப் பாவித்து அதில் மூழ்க வேண்டும்.
பூஜை அறையில் வழக்கமான இடத்தில் திருவிளக்கினை ஏற்றி, குலதெய்வத்தை மனதார கும்பிடுங்கள். பிறகு, சஷ்டி விரதம் இருந்ததன் பலன் கிட்ட அருள வேண்டும் என்று பிள்ளையாரிடம் மனதார வேண்டுங்கள். அடுத்து, உங்கள் வீட்டில் உள்ள முருகன் படம் அல்லது சிறிய முருகன் விக்ரகத்தினை எடுத்து கைகளில் வைத்துக்கொண்டு ஆறுமுகனை அகம் ஒன்றிக் கும்பிட்டு அன்போடு எழுந்தருள வேண்டுங்கள்.
பின் உங்கள் வசதிக்கு ஏற்றபடி சந்தனம், மஞ்சள், குங்குமம், ஜவ்வாது போன்றவற்றால் முருகனின் படம் அல்லது விக்ரகத்திற்கு பொட்டு வைத்து, பூப்போட்டு அலங்கரியுங்கள்.. ஊதுபத்தி, சாம்பிராணி போன்றவற்றை புகையச் செய்து நறுமணம் கமழச் செய்யுங்கள். மனம் முழுவதும் அந்த மயில்வாகனனையே நினைத்தபடி கந்தசஷ்டி கவசம், கந்தகுரு கவசம், கந்தர் அனுபூதி, சுப்ரமண்ய புஜங்கம் போன்ற உங்களுக்குத் தெரிந்த துதிகளைச் சொல்லுங்கள் அல்லது கேளுங்கள்.
ஏதும் இயலாதவர்கள் கந்தா சரணம், முருகா சரணம், கார்த்திகை பாலா சரணம் என்று உங்களுக்குத் தெரிந்தபடி சரணங்களைச் சொல்லுங்கள். நிறைவாக தீப ஆராதனை காட்டியபின் இயன்ற நிவேதனம் செய்யுங்கள். பாலும், பழமும் இருந்தாலும் போதும். எளியோர்க்கும் எளியோனான கந்தக் கடவுள் அன்போடு அளிப்பதை ஏற்றருள்வான். ஆனால் முழுமனதோடு செய்வது முக்கியம்.
அன்று மாலை, பக்கத்திலுள்ள முருகன் கோயிலுக்குப் போய் தரிசனம் செய்து விரதத்தினை நிறைவு செய்யுங்கள். வேலவன் அருளால் மணப்பேறு, மகப்பேறு, நல்வாழ்வு, ஆரோக்யம், ஆயுள், புகழ், செல்வம் என்று நீங்கள் வேண்டிய யாவும் நிச்சயம் கைகூடும். நிம்மதி, சந்தோஷம், உற்சாகம் வாழ்வில் நிறையும். சூரசம்ஹாரத்தை விழாவாகக் கொண்டாட வேண்டும். அல்லது அவ்விழாவில் சென்று கலந்து கொள்ள வேண்டும்.
ஐந்து நாட்கள் நோன்பு இருந்து ஆறாம் நாள் சஷ்டியன்று நீராடி முருகனை வணங்கிப் பாராயணம் செய்தல் வேண்டும். இரவு ஆறு வேளையும் 1008 நாமங்களால் அர்ச்சனை செய்து உறங்காமல் கந்தன் நினைவுடன் இருக்க வேண்டும்.
ஏழாம் நாள் சப்தமியன்று ஆறு அடியவர்களுக்கு அன்னம் அளித்து பாராயணம் செய்தல் வேண்டும். இந்த ஆறு நாட்களும் உபவாசம் இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் பால், பழம் உண்டு சஷ்டியன்று முழு உபவாசமும் இருக்க வேண்டும்.
அவ்வாறு இருக்க முடியாதவர்கள் ஐந்து நாட்கள் உச்சி வேளையில் இறைவனுக்கு நிவேதித்த பால் பழங்களை உண்டு, இரவு உபவாசம் இருந்து ஆறாம் நாள் ஒரு நாள் மட்டுமாவது முழு உபவாசம் இருந்து வழிபட வேண்டும்.
கந்த சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் விடியற்காலை நான்கு மணிக்கே எழுந்திருந்து, நாட்கடன்களை முடித்துக் கொண்டு திருநீறு பூசி, வடதிசை நோக்கியோ, தென்திசை நோக்கியோ இருந்து முருகனைத் தியானித்துப் பிறகு விதிப்படி சிவதீர்த்தத்திலோ, புண்ணிய நதிகளிலோ நீராட வேண்டும். கடுமொழி, தகாத மொழி பேசுவது கூடாது. தாம்பத்திய உறவை துறக்க வேண்டும். வீட்டில் தூய்மை காக்க வேண்டியது அவசியம். முருகன் திருஉருவத்தை தியானம் செய்ய வேண்டும். இந்த விரதத்தை பொறுத்தவரை உடல் மற்றும் மனஒழுக்கம் மிகவும் முக்கியம்.
முறைப்படி இவற்றை பின்பற்றினோர் வாழ்க்கையில் பற்பல மேன்மைகளை எய்துவர். மேலும் உடல் வளமும், மனவலிமையும் பெற்று மகிழ்வர் என்பது உறுதி. குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை. இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள்.
குடும்பத்தில் துன்பங்கள் நீங்கவும், வேலைவாய்ப்பு, கடன் தொல்லை நீங்கவும் இவ்விரதத்தை கடைப்பிடிப்பது நன்று. சுருக்கமாகச் சொன்னால் இவ்விரதத்தை கடைபிடித்து விரும்பிய பலனைப் பெறலாம்.
Labels: கந்த சஷ்டி விரதம்
வடலூர் சத்ய ஞான சபை “ஜோதி தரிசனம்” எதை குறிக்கிறது?
வள்ளல் பெருமான் சத்ய ஞான சபையை 1872 ம் ஆண்டு நிறுவினார்.
ஞான உபதேசங்களை அருட்பாகளால் கூறி அருளிய வள்ளலார் பாமாரகளும் புரிந்து கொள்ளும் படியாக ஞான அனுபவம் எவ்வாறு இருக்கும் என்பதை விளக்க கட்டியதே ஞான சபை.
சத்ய ஞான சபை எண் (8) கோண அமைப்பு உடையது.
சத்ய ஞான சபை நம் தலை அமைப்பை போன்றது. முன்புறம் உள்ளே இருபுறமும் சிற்சபை , பொற்சபை உள்ளது.
நடுவே உள்ளே – ஞானசபை உள்ளது
முன்வாசலில் உள்ள சிற்சபை , பொற்சபை நம் கண்களை குறிப்பது.
ஞான சபை நம் அக்னி கலை உள்ள ஆன்ம ஸ்தானத்தை (நம் இரு கண்கள் உள் சேரும் இடம்) குறிப்பது.
ஆணவம், கன்மம், மாயை எனும் மும்மலன்களால் ஆன நமது கர்ம வினைகள் எழு திரைகள் போன்று ஆத்மா ஜோதி தெரியாதபடி மறைத்து கொண்டிருக்கும்.
இவ்வேழு திரைகள் விலகினால் தான் ஜோதி தரிசனம்.
நம் உயிரை பற்றி உள்ள வினைகள் நம் இரு கண்மணியில் நடுவில் உள்ள ஊசி முனை அளவு துவாரத்தை மூடியுள்ளது.
வள்ளலார் கண்ணாடி கூண்டின் உள் விளக்கினை ஏற்றி வைத்ததன் பொருள் இதுவே.
இவ்வினைக்கு தகுந்தபடியே நம் மனம் வேலை செய்கிறது.
நம் உடல் அமைப்பு, சுற்றம் போன்ற அனைத்தையும் நிர்ணயிப்பது இவ்வினைகள் தான்.
இவ்வினைக்கள் கண்ணாடி போல் உள்ளதால் நம்மால் பார்க்க முடிகிறது.
கண் இல்லாதவர்களுக்கு இவ்வினை திரை சுவர் போல் அமைந்து உள்ளதால் பார்வை சக்தி அவர்களுக்கு இல்லை.
குருவிடம் தீட்சை பெற்று- நம் கண்மணியில் உணர்வு பெற்று இந்த கண்மணி உணர்வில் நம் மனதை இருத்தி நினைந்து, உணர்ந்து தவம் செய்தால் நம் கண் ஒளி பெருகி அந்த வெப்பத்தால் வினை திரை கரையும்.
வினைகள் கரைய கரைய நம் துயர் நம்மை விட்டு நீங்கும்.
பின்னர் உள்ளே உள்ள ஜோதி தெரியும்.
குருவிடம் தீட்சை பெறுவதையே வள்ளல் பெருமான் “தகுந்த ஞான ஆசிரியரிடம் உங்கள் நடு கண் புருவ பூட்டை திறந்து கொள்வது நலம்” என்கிறார்.
தைபூசம் அன்று ஞானசபையில் ஒவ்வொன்றாக எழு வர்ண திரைகள் விலக்கப்பட்டு முடிவில் ஜோதி காண்பிக்க ஏற்பாடு செய்தார்.
மேலும் தை பூச தினதன்று ஜோதி காண்பிக்கப்படும் நேரத்தில் வலது பக்கம் சூரியனும் , இடது பக்கம் சந்திரனும் நேர் கோட்டில் இருக்கும்.
நமது உடலில் வலது கண் சூரியனையும் இடது கண் சந்திரனையும் குறிக்கும்.
நமது உடலிலும் வலது கண் ஒளியும், இடது கண் ஒளியும் உள் சென்று அக்னி கலையோடு சேர்வதை குறிக்கவே இவ்வேறுபாடு.
எட்டும் , இரண்டும் என்று நமது கண்களையே கூறிப்பிடுவர் சித்தர்கள், ஞானிகள்.
இதையே அகஸ்தியர் தனது துறையறி விளக்கத்தில்
“சுடு கொண்ட திருஆடு துறையை நோக்கில் சூரியனும் சந்திரனும் தோற்றமாமே” கூறிபிடுகிறார்
“சத்ய ஞான சபையை என்னுள் கண்டனன்” என்று வள்ளல் பெருமான் அனைவரும் தங்களுள் ஜோதி தரிசனம் காண வேண்டும் என்று கூறிப்பிடுகிறார்.
சத்ய ஞான சபையில் வெளியே வாசலில் வள்ளலார் பொரிந்த வாசகம் “புலால் கொலை தவிர்த்தவர் மட்டுமே உள்ளே வரவும்” என்று.
இதன் மூலம் நம் வினையை வெல்ல, நம்மை உணர, ஆண்டவனை அடைய முதல் செயல் புலால் கொலை முற்றும் தவர்க்க வேண்டும் என்பதே.
இவ்வாறு புலை, கொலை தவிர்த்தவர் தான் தம்முள் உள்ள ஆன்ம ஜோதியை தரிசிக்க தகுதி பெற்றவர் ஆவர்.
அன்புடையீர் எனவே புலால் உணவை தவிர்த்து , மது , புகை போன்ற போதை பழக்கத்தை விட்டு வள்ளல் பெருமான் கூறியபடி ஆகவினத்தாராக மாறுங்கள்.
வடலூர் வந்து சத்ய ஞான சபையில் ஜோதி தரிசனம் காணுங்கள்.
குருவிடம் தீட்சை பெற்று தவம் செய்து வினை திரையை விலக்கி உங்களுள் ஆன்ம தரிசனம் பெறுங்கள்.
வள்ளல் பெருமான் தங்களிடம் இருந்து காத்து வழிநடத்துவார்.
Labels: ”மெய்ப்பொருள்"
ஆலயம் செல்வதால் அறிவியல் ரீதியாக மனிதனுக்கு ஏற்படும் நன்மைகள்
கோயில் என்பது தெய்வத்தின் இருப்பிடம் மட்டுமில்லை. கோயில் என்பது
விஞ்ஞானபூர்வமாக மனிதனுக்கு உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பல நன்மைகள்
செய்வதற்காக அமைக்கப்பட்ட ஒரு கிளினிக் என்றே சொல்லலாம். சாஸ்திரப்படி
அமைக்கப்படும் கோயில்கள், பூமியின் காந்த அலைகள் அடர்த்தியாகப் பாயும்
இடத்தில் அமைகின்றன. ஊர்க்கோடியிலோ, ஊர் நடுவிலோ, மலையுச்சியிலோ
எங்காயினும் கோயிலுக்கென்று இடம் அந்தக் காலத்தில் அமைக்கப்பட்டது இந்த
அடிப்படையில்தான்!
இந்த உயர்காந்த அலைகள் (ஹை மேக்னடிக் வேவ்ஸ்) அடர்ந்திருக்கும் இடத்தின் மையப்பகுதியில் கர்ப்பக்கிருகம் (மூலஸ்தானம்) அமைக்கப்படுகிறது.
அதனால்தான் கர்ப்பக்கிருகத்தில் மூல விக்கிரகத்தின் அடியில், யந்திரங்கள் பதித்தார்கள். சில உயரிய மந்திரங்கள் பொறிக்கப்பட்ட செப்புத்தகடுகளே யந்திரங்கள்! பூமியின் காந்த அலைகளை செப்புத்தகடுகள் உள்வாங்கி சுற்றுப்புறத்துக்கு அதைப் பாய்ச்சுகிறது. இந்த விஞ்ஞான அடிப்படையில்தான் மின்சாரத்தைக் கொண்டுசெல்ல செப்புக்கம்பிகளை உபயோகப்படுத்துகின்றனர். கர்ப்பக்கிருகத்தைப் பிரதட்சணமாக (க்ளாக்வைஸ்) சுற்றும் பக்தர்களின் உடலில், தானாகவே இந்த காந்த சக்தி மென்மையாகப் பாய்கிறது. அடிக்கடி கோயிலுக்கு வந்து பிரதட்சணம் செய்யச் செய்ய இந்த காந்த சக்தி உடலில் கணிசமாக ஏறுகிறது.
இதனால் உடலில் பாஸிடிவ் எனர்ஜி உண்டாகிறது. இந்தச் சக்தி பூரணமாக பக்தர்களைச் சென்றடைவதற்காகவே, மூலஸ்தானம் மூன்று பக்கமும் பெரிய ஜன்னல்கள் இல்லாமல் அடைக்கப்படுகிறது. இதனால் கர்ப்பக்கிருகத்துக்கு வெளியில் நின்று தரிசிக்கும் பக்தர்களின் மேல் யந்திரத்தின் காந்த சக்தி முழுதாகப் பாய முடிகிறது. மூலஸ்தானத்தில் ஏற்றப்படும் விளக்குகள், உஷ்ண சக்தியையும் வெளிச்ச சக்தியையும் பாய்ச்சுகிறது.
கோயிலில் ஒலிக்கும் மணிச் சத்தமும் பூஜை மந்திரச் சப்தங்களும் சவுண்ட் எனர்ஜி-யைத் தருகின்றன. பூஜை முடிந்ததும் பக்தர்களுக்கு வழங்கப்படும் தீர்த்தத்தில் ஏலக்காய், துளசி, கிராம்பு போன்றவை கலக்கப்படுகின்றன. இந்தப் பண்டங்கள் எல்லாமே மனித ஆரோக்கியத்துக்கு உதவுவதால், தீர்த்தம் புனிதமானதாக மட்டுமில்லாமல் உடல் வளத்துக்கு உபயோகமானதாகவும் ஆகிறது. பெருமாள் கோயிலில் மஞ்சளும், குருவாயூரப்பன் கோயிலில் சந்தனமும், சிவன் கோயிலில் திருநீறும், பொதுவாகக் குங்குமமும் பிரசாதமாகக் கொடுக்கப்படுகின்றன. இவை எல்லாமே மருத்துவ குணமுடைய வஸ்துக்களை உள்ளடக்கியது.
பெருமாள் கோயிலில் தீர்த்தத்தில் கலக்கப்படும் பச்சைக் கற்பூரம், வாசனையாகவும் வித்தியாசமான சுவையுடையதாகவும் இருக்கும். உடலில் ரத்தக்காயம் ஏற்பட்டால், நாம் உடனே காயம் செப்டிக் ஆகாமல் இருக்க தடவுகிறோமே பென்சாயின் ! அது வேறொன்றுமில்லை, பச்சைக் கற்பூரக் கலவையில் உருவாவதுதான். கர்ப்பக்கிருகத்தில் நம்மேல் பாயக்கூடிய பாஸிடிவ் காந்த அலைகளைப் பெற்றுக் கொள்வதற்காகத்தான் பல கோயில்களில் ஆண்கள் சட்டை அணியாமல் வர வேண்டும் என்று சொல்கிறார்கள். பொதுவாகப் பெண்கள் அணியும் தங்க நகைகளில் கலந்திருக்கும் செம்பின் மூலம் அவர்களுக்கும் இதே எனர்ஜி பாய்கிறது.
கோயில் பிராகாரத்தை 11 முறை, 108 முறை என்று பிரதட்சணம் செய்யும்போது, நமது உடலின் கொழுப்பு தானாக எரிந்து ஆரோக்கியம் கூடுகிறது. அந்தக் காலத்தில் கோயிலுக்குச் சென்று பிரதட்சணம் செய்ததாலேயே சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற வியாதிகள் தவிர்க்கப்பட்டன. இதோடு வேத கோஷமும், பிரார்த்தனை சுலோகங்களும் சொல்லும்போது, உடலுடன் சேர்ந்து உள்ளமும் புத்துணர்ச்சி பெறுகிறது.

மௌனகுரு சுவாமியின் ஜீவசமாதி
1961ஆம் ஆண்டு பில்வ வருடம், புரட்டாசி மாதம் மகாளய அமாவாசையன்று அஸ்த நட்சத்திரம் சோமவாரம் கூடிய நன்னாளில் எல்லோரையும் அழைத்து, தான் சமாதி அடையப் போவதை கூறி, அப்படியே ஜீவசமாதி அடைந்திருக்கிறார். அதற்கு முன், தான் ஜீவசமாதி அடையப்போகும் இடம் எந்த செட்டியாருக்கு சொந்தமானது; எந்த சர்வே எண்ணில்; ஆவணத்தில் எத்தனையாவது பக்கத்தில் எந்த குறியீடு போட்டிருக்கும் என்ற விவரங்களை எல்லாம் சொல்லி, அன்பளிப்பாக நிலதானம் வேண்டாம் என மறுத்து, தன் பக்தன் ஒருவன் பெயருக்கு நூறு ரூபாய்க்கு கிரயம் செய்துதரச் சொல்லி, பின்னரே இவ்விடத்தில் ஜீவ சமாதி அடைந்துள்ளார் மௌன குரு சுவாமிகள்.
ஜீவ சமாதியின் மீது விநாயகர் சிலை முதலில் இருந்தது. காஞ்சிப் பெரியவரின் ஆலோசனைப்படியே மௌனகுரு சுவாமியின் திருவுருவ சிலையையும் பிரதிஷ்டை செய்தார்கள்.
இந்த சுவாமிகளின் ஆலயம் இன்று அமைந்து இருப்பது அப்பர் சமாதி கோவில் தெருவில். இது குடிசை பகுதி. இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் எங்கு இருக்கிறது என்று கேட்டால் திருவொற்றியூர்ரில் பலருக்கு தெரிவதில்லை. நீங்கள் அந்த கோவிலுக்கு வெளியில் கிழக்கு கோபுர வாயிலில் அப்பர் சுவாமிகள் கோவில் தெரு எப்படி போவது என்று கேளுங்கள். அந்த கோபுர வாயிலுக்கு எதிராக ஒரே ரோட். அது முடிந்ததும் திருவொற்றியூர் பீச் main ரோட் வரும். அதை க்ராஸ் பண்ணி நேராக போனால் அப்பர் சாமி கோவில் தெரு. அதில் இடது பக்கம் ஒரு பத்து குடிசைகள், வலது பக்கம் பத்து குடிசைகள் அதற்கு நடுவே சுவாமிகளின் அதிஷ்டானம் அமைந்துள்ளது. அந்த தெருவில் இவர் சமாதியை அனைவருக்கும் தெரிகிறது என்பதில் அடியேனுக்கு மகிழ்ச்சி. காரணம் அடியேன் பாடகச்சேரி சுவாமிகள், அப்புடு ஸ்வாமிகளை தரிசிக்க சென்ற பொழுது பக்கத்து காம்பௌன்ட்டில் இருப்பவரே அங்கு சக்தி வாய்ந்த ஞானியர் அதிஸ்டானங்கள் இருப்பதை அறியாதவராய் இருந்தார். இந்த சுவாமிகளின் அதிஸ்டானம் இருக்கும் அதே தெருவில் சடை சுவாமிகள் என்கிற சக்தி வாய்ந்த ஒரு சித்தரின் அதிஸ்டானம் இருக்கிறது. அந்த சடை சித்தரின் ஆலயம் மௌன குரு சுவாமிகளின் ஆசிரமத்திற்கு பூஜை செய்பவரின் இல்லத்தினுள்ளேயே இருக்கிறது.
வேதன் செய்த சிருஷ்டிகள்போல் வேறு செய்குவோம்
வேதனையு மெங்கள் கீழே மேவச் செய்குவோம்
நாதனுடன் நாங்களும் சமமாக வாழ்குவோம்
நாங்கள் செய்கை யாம் இது வென் றாடு பாம்பே...
என்று பாம்பாட்டி சித்தர் பாடியது போல, நாதனுடன் (இறைவனுடன்) சமமாக நாளும் (இன்றும்கூட) வாழ்ந்துக் கொண்டிருக்கும் கண்ணப்ப சுவாமிகளின் ஜீவசமாதியில், நினைத்த காரியங்கள் வெற்றியோடு முடிய, அவரின் காந்த அதிர்வுகளை கைப்பற்ற இன்றே புறப்படுங்கள்...
Labels: மௌனகுரு சுவாமி
பட்டினத்தார் ஜீவசமாதி
சென்னை தோன்றுவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இன்று வடசென்னையின் ஒரு பகுதியாகவே கருதப்படும் திருவொற்றியூர் கடற்கரையில் சமாதி கொண்ட பட்டினத்தார், காவிரிப்பூம்பட்டினத்துக்காரர்தான். அவர் கையில் இருந்த பேய்க் கரும்பின் கசப்பு திருவொற்றியூர் என்கிற இன்றைய சென்னையின் தலைமாட்டுக்கு அவர் வந்த பிறகுதான் இனித்தது.
அவ்விடத்தையே தமது உடல் ரீதியான நடமாட்டம் முடிவுக்கு வந்துவிட்டதாகப் புரிந்து கொண்டு அதையே தனது அடக்கத் தலமாகத் தேர்ந்து கொண்டுவிட்டார், பட்டினத்தார்.
இவருடைய வரலாறு சற்று நீண்டது.
இளமை முதலே இவர் வாழ்வில் அற்புதங்கள் பல நிகழ்ந்ததாய்ச் சொல்லப்படுகின்றது. குபேரன் தான் இப்பூவுலகில் பட்டினத்தாராக அவதரித்தார் என்று திருவெண்காட்டுப் புராணம் கூறும். மண்ணுலகில் உள்ள பல சிவ ஸ்தலங்களை தரிசிக்க குபேரன் விரும்பினார். அதனால் காவேரி பூம்பட்டினத்தில், பிறந்தார். பெற்றோர்கள் சிவநேசன்-ஞானகலாம்பை ஆவர். இவர்களின் தவப்பயனாய்ப் பிறந்தவரே பட்டினத்தார். இவருக்குப் பெற்றோர் வைத்த பெயர் திருவெண்காடர். திருவெங்காடு சென்று வேண்டி பெற்ற பிள்ளையாதலின் திருவெங்காடர் என பெயரிட்டனர். நாளை இந்த பிள்ளை பல கோடி சிவன் அடியார்கள் பேர் சொல்லும் ஒரு சித்தராக வர போகிறது என்பதை அன்று அவர்கள் அறியவில்லை.
Labels: பட்டினத்தார்
உற்ற நோய்க்கு மருந்து பிறிதில்லை -மனமே...!
>> பாவம் செய்யாதிரு மனமே...
கோபம் செய்யாதே -எமன் கொண்டோடி போவான்...
பாவம் செய்யாதிரு மனமே ....எனும் கடுவெளி சித்தரின் வாய்மொழிக்கினங்க நமக்கு உற்ற நோய்க்கு மருந்து வேறு எங்கும் இல்லை ..நமக்குள்ளே தான் மருந்து உள்ளது ..பல போது அது வேலை செய்யாமல் போவதற்கு நமது கர்ம வினையே காரணம் ..
>> நாம் உடலால் ,மனத்தால் ,மொழியால் நாம் செய்த கர்ம
வினைபயனால் தான் அனைத்து துன்பங்களும் நமக்கு விளைகிறது .."" மனம் போல
வாழ்வு "" எனும் பழமொழி இதை தான் நமக்கு உணர்த்தும் உண்மையாகும்..நாம்
விதைத்த வினைகளை நாம் தான் அறுவடை செய்தே ஆகவேண்டும் ...
>> நாம் இப்பிறவில் செய்த கர்மம் சிஞ்ஜித கர்மம் ..வழி வழியாய் வருவது பிராப்த கர்மம் ..நாம் தற்போது வாழும் இம்மைக்கும்,இறுதியான மறுமைக்கும் நமக்கு மருந்தாக இருப்பது நமது நல்ல மனமே ஆகும்..
>> இதற்கு நாம் உடலால் ,மனத்தால் ,மொழியால் யாருக்கும் தீங்கு செய்யாதிருங்கள் ... அனைத்து உயிர்களையும் நேசித்திருங்கள் ..தேனின் ஒழுக்கு போல இறைவனை இடையறாது பற்றுங்கள்...மொழியால் இறைவனை பாடி துதி (தேவார -திருவாசகம்) செய்யுங்கள் ..முடிந்தால் மற்றவர்க்கு உதவுங்கள் ..யார்க்கும் துன்பம் தரும் செயல்களை செய்யாதிருங்கள் ...தாய்- தந்தையரை பேணுங்கள்...நேர்மறையான எண்ணங்களை வளர்த்து கொள்ளுங்கள் ....
>> இதனை பின்பற்றியவர்களுக்கு தெய்வ பலம் -மனோபலம் பெருகும் ..ஜாதகத்தில் எத்தனை கெடுபலன்கள் இருந்தாலும் ..நமக்கு நல்லதே நடக்கும் ...நீங்கள் நினைத்த காரியம் கைகூடும் ..வாழ்க வளமுடன் ...