புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

ஓம் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம்

 

 ஓம் ஸ்ரீ லலிதா சஹஸ்ர நாம விளக்கம் 36: SRI LALITHA SHASHRANAMA STHOTHRAM EXPLANATION 36: ஸ்ரீ நகர வர்ணணை SRI NAGAR EXPLANATION || ஓம் || || OM || மஹாபத்மாடவீஸம்ஸ்தா கதம்பவநவாஸிநீ | ஸுதாஸாகரமத்யஸ்தா காமாக்ஷீ காமதாயிநீ || MAHAPADMATAVI SANSDHA KADANBA VANAVASINEE | SUDHA SAGARA MADHYASDHA KAMAKSHI KAMADAEINEE || ஓம் கதம்பவந-வாஸின்யை நம (60) கதம்பவனத்தில் வசிப்பவள் தேவி தெய்வீக மணத்தினை பரப்பும் கதம்ப வனத்தின் நடுவில் வசிக்கின்றாள். அவளுடைய சிந்தாமணி க்ருஹத்தினைச் சூழ கதம்ப மரங்களால் நிறைந்த வனம் காணப்படுகிறது. இயற்கையின் பச்சை நிறம் இங்கு குறிப்பிடப்படுகிறது. இந்த வர்ணணை மூலம்
வாக்தேவிகள் தேவியின் பிருத்வி தத்துவத்தினைப் பற்றிக் குறிப்பிடுகின்றனர். தேவி பூமித்தாய் எனவும் அழைக்கப்படுகின்றனர். சிந்தாமணி க்ருஹத்தினை சூழ இருபத்தி ஐந்து சுவர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. இவை ஒவ்வொரு தத்துவத்தினை குறிப்பவை. கதம்ப வனம் எட்டாவது தங்கச்சுவரிற்கும் ஏழாவது வெள்ளிச்சுவரிற்கும் இடையில் காணப்படுகிறது. இங்கு ஒரு முக்கியமான விடயம் அறிந்துகொள்ளலாம், ஸ்ரீ சக்கரத்தின் அனைத்து தேவ தேவியரும் இந்த ஏழாவது எட்டாவது சுவர்களுக்கிடையில் இடைத்தொடர்படைகின்றனர். வேத முறைப்படி பன்னிரெண்டு மாதங்கள் காணப்படுகின்றன. இந்த பன்னிரெண்டு மாதங்களும் இவ்விரண்டாக ஆறு ருதுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு ருதுவும் ஒவ்வொரு தெய்வத்தால் ஆளப்படுகிறது. இந்த ஆறு கடவுள்களும் அவர்களுடைய சக்தியுடன் ஸ்ரீ புரத்தில் உள்ள மூன்று தொடக்கம் எட்டாவது சுவர் வரையிலான பகுதியில் வசிக்கின்றனர். தங்கச்சுவரிற்கும் வெள்ளிச்சுவரிற்கும் இடைப்பட்ட பகுதியில் மந்திரிணி தேவி எனப்படும் ராஜசியாமளை வசிக்கிறாள். இவள் 90 பீஜங்களுடைய மந்திரத்தின் வித்தையான பிரம்ம வித்தையிற்கு அதிபதி. நாமம் 10 இனை பார்க்கவும். வாக்தேவிகள் லலிதை எவ்வாறு இந்த பிரபஞ்சத்தின் மிக நுண்ணிய அசைவினையும் கட்டுப்படுத்துகிறாள் என்பதனை விளக்குகின்றனர். வார்த்தைப்பொருளினை வைத்துப்பார்க்கும் போது இந்த நாமத்திற்கு முக்கியமான பொருள் எதுவும் இல்லை. ஆனால் இந்த சஹஸ்ர நாமத்தில் ஒவ்வொரு நாமமும் உள்ளார்ந்த இரகசிய அர்த்தத்தினையும் மந்திர பீஜத்தினையும் கொண்டிருக்கும். பொதுவாக இந்த இரகசியங்கள் பொதுவில் பகிர்வதில்லை. இத்தகைய இரகசியங்களை அறிந்தவர்கள் மிக அரிதானவர்களே உள்ளனர். இந்த நாமம் மதுரை மீனாட்சியை குறிக்கும்.மதுரை முன்பு காதம்ப வனமாக இருந்தது. அன்னை ராஜ ஷாமளையே மதுரையில் மீனாட்சியாக இருகின்றாள்.

                                                                                     ”மெய்ப்பொருள் காண்ப தறிவு"

0 comments:

Post a Comment

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthik rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.