108 சித்தர்களும் அவர்களின் ஜீவ சமாதிகளும்
1. திருமூலர் - சிதம்பரம்.
2. போகர் - பழனி என்கிற ஆவினன்குடி.
3. கருவூர்சித்தர் – கருவூர், திருகாளத்தி, ஆணிலையப்பர் கோவில்.
4. புலிப்பாணி - பழனி அருகில் வைகாவூர்.
5. கொங்கணர் - திருப்பதி, திருமலை
6. மச்சமுனி - திருப்பரங்குன்றம், திருவானைக்கால்
7. வல்லப சித்தர் என்னும் சுந்தரானந்தர் - மதுரை.
8. சட்டைமுனி சித்தர் – திருவரங்கம்.
9. அகத்தியர் – திருவனந்தபுரம், கும்பகோணத்திலுள்ள கும்பேஸ்வரர் கோவில்.
10. தேரையர் - தோரணமலை (மலையாள நாடு)
11. கோரக்கர் – பேரூர்.
12. பாம்பாட்டி சித்தர் - மருதமலை, துவாரகை, விருத்தாசலம்.
13. சிவவாக்கியர் - கும்பகோணம்.
14. உரோமரிசி - திருக்கயிலை
15. காகபுசுண்டர் - திருச்சி, உறையூர்.
16. இடைக்காட்டுச் சித்தர் - திருவண்ணாமலை
17. குதம்ப்பைச் சித்தர் - மயிலாடுதுறை
18. பதஞ்சலி சித்தர் - சிதம்பரம், அழகர் கோவில், இராமேஸ்வரம்.
19. புலத்தியர் - பாபநாசம், திருஆலவுடையார் கோவில்.
20. திருமூலம் நோக்க சித்தர் - மேலை சிதம்பரம்.
21. அழகண்ண சித்தர் - நாகப்பட்டினம்.
22. நாரதர் - திருவிடைமருதூர், கருவை நல்லூர்.
23. இராமதேவ சித்தர் - அழகர் மலை
24. மார்க்கண்டேயர் - கருவை நல்லூர்.
25. புண்ணாக்கீசர் - நண்ணாசேர்.
26. காசிபர் - ருத்ரகிரி
27. வரதர் - தென்மலை
28. கன்னிச் சித்தர் - பெருங்காவூர்.
29. தன்வந்தரி – வைத்தீஸ்வரன் கோவில்
30. நந்தி சித்தர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
31. காடுவெளி சித்தர் - திருக்காஞ்சிபுரம்.
32. விசுவாமித்திரர் - காசி, திருவாவடுதுறை, காளங்கி.
33. கௌதமர் - திருவருணை, திருவிடைமருதூர்.
34. கமல முனி - ஆரூர்
35. சந்திரானந்தர் - திருவாஞ்சியம்.
36. சுந்தரர் - வாரிட்சம், திருவாரூர்.
37. காளங்கி நாதர் - திருக்கடவூர், திருப்பணந்தாள்.
38. வான்மீகி - எட்டிக்குடி, திருவையாறு.
39. அகப்பேய் சித்தர் - திருவையாறு, எட்டிக்குடி.
40. பட்டினத்தார் - திருவொற்றியூர்.
41. வள்ளலார் - வடலூர்.
42. சென்னிமலை சித்தர் - கேரளத்தில் உள்ள நாங்குனாசேரி.
43. சதாசிவ_பிரமேந்திரர்_சமாதிசதாசிவப் பிரம்மேந்திரர் - நெரூர்.
44. ராமகிருஷ்ணர், சாரதாதேவியார் - பேலூர் மடம்
45. ராகவேந்திரர் - மந்திராலயம்.
46. ரமண மகரிஷி - திருவண்ணாமலை, மாத்ருபூதேஸ்வரர் ஆலயம்.
47. குமரகுருபரர் - காசி.
48. நடன கோபால நாயகி சுவாமிகள் - காதக்கிணறு.
49. ஞானானந்த சுவாமிகள் - அனைத்து தபோவனங்கள்.
50. ஷீரடி சாயிபாபா - ஷீரடி.
51. சேக்கிழார் பெருமான் - மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி சன்னதிக்கு பின்புறம்.
52. ராமானுஜர் - ஸ்ரீரங்கம்.
53. பரமஹம்ச யோகானந்தர் - கலிபோர்னியா.
54. யுக்தேஸ்வரர் - பூரி.
55. ஜட்ஜ் சுவாமிகள் - புதுக்கோட்டை
56. ஆதி பராசக்தி திருகோவிலில் 21 சித்தர்களின் ஜீவ சமாதிகள் உள்ளன.
57. கண்ணப்ப நாயனார் - காளஹஸ்தி.
58. சிவப்பிரகாச அடிகள் - திருப்பழையாறை வடதளி.
59. குரு பாபா ராம்தேவ் - போகரனிலிருந்து 13 கி.மி.
60. ராணி சென்னம்மாள் - பிதானூர், கொப்புலிமடம்.
61. பூஜ்ய ஸ்ரீ சித்த நரஹரி குருஜி - மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் அருகில் சித்தாசிரமம்.
62. குழந்தையானந்த சுவாமிகள் - மதுரை காளவாசல்.
63. முத்து வடுகநாதர் - சிங்கம் புணரி.
64. இராமதேவர் - நாகப்பட்டிணம்.
65. அருணகிரிநாதர் - திருவண்ணாமலை.
66. பாடக்சேரி தவத்திரு இராமலிங்க சுவாமிகள் – தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன் திருக்கோவில்.
67. மௌன சாமி சித்தர் - தென்காசியிலிருந்து செங்கோட்டை செல்லும் வழியில் உள்ளது.
68. சிறுதொண்டை நாயனார் - திருச்செட்டாங்குடி.
69. ஒடுக்கத்தூர் சுவாமிகள் - பெங்களூரில் அல்சூர் ஏரிக்கரையில் உள்ளது.
70. வல்லநாட்டு மகாசித்தர் - வல்லநாடு.
71. சுப்பிரமணிய சித்தர் - ரெட்டியப்பட்டி.
72. சிவஞான பாலசித்தர் - மயிலாடுதுறை முருகன் சந்நிதி.
73. கம்பர் - நாட்டரசன் கோட்டை.
74. நாகலிங்க சுவாமிகள் - புதுவை அம்பலத்தாடையார் மடம்.
75. அழகர் சுவாமிகள் - தென்னம்பாக்கம்.
76. சிவஞான பாலைய சுவாமிகள் - புதுவைக்கு வடக்கே 6 மைல் தொலைவில் உள்ளது.
77. சித்தானந்த சுவாமிகள் - புதுவைக்கு அருகிலுள்ள கருவடிக்குப்பம்.
78. சக்திவேல் பரமானந்த குரு - புதுவையிலுள்ள முதலியார் பேட்டை.
79. ஸ்ரீராம் பரதேசி சுவாமிகள் - வில்லியனூர் செல்லும் பாதையில் வலப்புறம் அமைந்து உள்ளது.
80. அக்கா சுவாமிகள் - புதுவையில் உள்ள குதிரைக்களம் அருகே.
81. மகான் படே சுவாமிகள் - சின்னபாபு சமுத்திரம்.
82. கம்பளி ஞானதேசிக சுவாமிகள் - புதுவை அருகில் ருத்திர பூமிக்கு சமீபமாக அமைந்துள்ளது.
83. பகவந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
84. கதிர்வேல் சுவாமிகள் – ஸ்ரீலங்கா, புதுவை அருகில் சித்தன் குடியிலும் சமாதி உண்டு.
85. சாந்த நந்த சுவாமிகள் - ஸ்ரீ சாரதா சிவகங்கை பீடத்திற்கு அருகில் உள்ளது.
86. தயானந்த சுவாமிகள் - புதுப்பாளையத்தில் கெடில நதிக்கரையில்.
87. தஷிணாமூர்த்தி சுவாமிகள் - பாண்டிசேரியடுத்த பள்ளித் தென்னல்.
88. ஞானகுரு குள்ளச்சாமிகள் - புதுவை.
89. வேதாந்த சுவாமிகள் - புதுவை, திருமுத்துகுமார் சுவாமிகள் தோட்டத்தில் உள்ளது.
90. லஷ்மண சுவாமிகள் - புதுவையிலுள்ள புதுப்பட்டி.
91. மண்ணுருட்டி சுவாமிகள் - புதுவையிலுள்ள சுதேசி காட்டன் மில் எதிரில்.
92. சுப்பிரமணிய அபிநய சச்சிதானந்த பாரதி சுவாமிகள் - பாண்டிசேரியிலுள்ள எல்லப் பிள்ளை.
93. யோகி ராம் சுரத்குமார் (விசிறி சுவாமிகள்) - திருவண்ணாமலை.
94. கோட்டூர் சுவாமிகள் - சாத்தூர் அருகிலுள்ள கோட்டூர்.
95. தகப்பன் மகன் சமாதி - கிரிவலம் வந்த நல்லூர் அருகே பனையூர்.
96. நாராயண சாமி அய்யா சமாதி - நாகர்கோவில்.
97. போதேந்திர சுவாமிகள் - தஞ்சை மாவட்டத்திலுள்ள மருதநல்லூர்.
98. அவதூர ரோக நிவர்தீஸ்வரர் சுவாமிகள் - சென்னை பூந்தமல்லி.
99. வன்மீக நாதர் - எட்டிக்குடி.
100. தம்பிக்கலையான் சித்தர் - சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் திருக்கோவிலில் உள்ள 108 சிவலிங்கங்களில் இரண்டாவதாக உள்ள லிங்கத்தில் ஐக்கியம் ஆகியுள்ளார்.
101. மெய்வரத் தம்பிரான் சுவாமிகள் - திருச்சி, ஜெயங்கொண்ட சோழபுரத்திலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ளது.
102. குகை நாச்சியார் மகான் - திருவண்ணாமலை.
103. வாலைகுருசாமி - சிதம்பரத்திலுள்ள கொம்மடிக் கோட்டை.
104. பாம்பன் சுவாமிகள் - திருவான்மியூர்.
105. குமாரசாமி சித்தர் சுவாமிகள் - கோயமுத்தூரிலுள்ள பூராண்டான் பாளையம்.
106. பெரியாழ்வார் சுவாமிகள் - அழகர் கோவில் (மதுரை)
107. மாயம்மா ஜீவசமாதி - கன்னியாகுமரி.
108. பரமாச்சாரியார் ஜீவசமாதி - காஞ்சிபுரம்
தியானத்தால் ஏற்படும் நன்மைகள் !!!
1) அறிவுக் கூர்மை ஏற்படும்.
2) மன உறுதி உண்டாகும்.
3) மனம் ஆனந்த அமைதியில் திளைக்கும்.
4) பிரச்சனைகளை எளிதாக தீர்க்க கூடிய மன வலிமை ஏற்படும்.
5) ஞாபக சக்தி அதிகரிக்கும்.
6) நம்மை சுற்றி நல்ல அதிர்வு அலை ஏற்படும்.
7) நல்ல நண்பர்களும், நல்ல சூழ்நிலைகளும் சூழும்.
8) முகம் பிரகாசமடையும்.
9) மனதிற்கு எஜமானனாகலாம். நாம் சொல்வதை மனம் கேட்கும்.
10) பழக்கத்திலிருந்து விடு படக் கூடிய மன சக்தி கிட்டும்.
11) மனம் அமைதி அடைவதால் பரபரப்பு குறைந்து உடல் நலத்திற்கு நன்மை விளைவிக்கும்.
12) தேவையற்ற கோபம் போகும்.
13) மாணவர்களுக்கு படிப்பில் விருப்பம் ஏற்படும். நல்ல பழக்கங்கள் உண்டாகும்.
14) மன ஒருமைப்பாடு உண்டாகும்.
15) மனம் கட்டுப் பாட்டில் இருப்பதால் தேவையற்ற எண்ணங்கள் குறையும்.
ஆதலினால் தியானிப்பீர்...!
Labels: ”மெய்ப்பொருள்"
இறைவன் யார் ?
இறைவன் யார் ?
தேடி கிடைப்பவரா?
தேடினால் கிடைத்திடுவரா?
மறைந்து வாழ்பவரா?
உன்னை மறந்து வாழ்பவரா?
மறைகளில் இருப்பவரா?
முறைகளில் இருப்பவரா?
பகுத்து அறியப்படுபவரா?
நீ பகுத்திட வல்லவரா?
உனக்கு அறிவு தந்தவரா?
உன்னால் அறிய முடிந்தவரா?
சங்கடம் தருபவரா ?
சங்கடம் தீர்ப்பவரா ?
இன்பம் அளிப்பவரா?
இன்பமாக இருப்பவரா?
உன்னை ஆட்டிப்படைப்பவரா?
ஆனந்தமாய் ஆடியிருப்பவரா?
ஒரு சமூகமாய் இருப்பவரா?
உன் சமூகமாய் இருப்பவரா ?
சமயமாய் சார்ந்தவரா?
மதங்களாய் ஓங்கியவரா?
இன்னும் எத்தனை கேள்விகள் தொடுத்தீர்கள் ?
விடை கண்டீரோ ?கண்டவர் உண்டோ?கண்டினும் விளக்கினோர் உண்டோ?
இறைவன் இல்லையென்பவன் மட்டும் பகுத்தறிவாளன் அல்ல..
சிறுதெய்வம் பெருதெய்வம் என பலவாக வணங்கும் அத்துனை பேரும் பகுத்தறிவாளியே...!
கேள்வி பகுத்தறிவாளனின் தாய்மொழி...!
இறைவன் ஒருவனே என்று நீ எதை வணங்கினாலும் அது சிவமே...
தேடுகின்ற அறிவை தந்தவனையே அறிவதை விடுத்து
இறைவன் ஒருவன் என்பதை உணர்ந்து வாழுங்கள் தாமாக வெ ளிப்படுவார்...
நான் அறிந்த சிவம் இனி நீ உணர
”மெய்ப்பொருள் காண்ப தறிவு"
Labels: ”மெய்ப்பொருள்"
யான்பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்.
இன்பம் தரும் இறைவடிவத்தை, கல்யாண திருக்கோலத்தை, வீட்டில் அமர்த்தி இத்தெய்வீகப் பாடல்களை பாடுவோம்.
ஓம்
ஐந்து
கரத்தனை ஆனை
முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும்
எயிற்றனை
நந்தி
மகன்தனை ஞானக்
கொழுந்தினைப்
புந்தியில் வைத்து
அடி
போற்றுகின்றனே.
அன்பும்
சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே
சிவமாவது ஆரும்
அறிகிலார்
அன்பே
சிவமாவது ஆரும்
அறிந்தபின்
அன்பே
சிவமாய் அமர்ந்திருந்தாரே.
ஒன்றே
குலமும் ஒருவனே
தேவனும்
நன்றே
நினைமின் நமனில்லை நாணாமே
சென்றே
புகுங்கதியில்லை நும்
சித்தத்து
நின்றே
நிலைபெற நீர்
நினைந்து உய்மினே.
யான்பெற்ற இன்பம்
பெறுக
இவ்வையகம்
வான்பற்றி நின்ற
மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற
உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத்
தலைப்படுந் தானே.
- திருமந்திரம் (திருமூலர்)
அஞ்சுமுகம் தோன்றில் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல்
தோன்றும் - நெஞ்சில்
ஒருகால் நினைக்கின் இருகாலும் தோன்றும்
முருகா
என்றோதுவார் முன்.
- திருமுருகாற்றுப்படை வெண்பா (நக்கீரர்)
மண்ணில்
நல்லவண்ணம் வாழலாம் வைகலும்
எண்ணில் நல்லகதிக்கு யாதுமோர் குறைவிலை
கண்ணில் நல்லஃதுறும் கழுமல
வளநகர்ப்
பெண்ணில் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.
- தேவாரம் (சம்பந்தர்)
ஈன்றாளுமாய் எனக்கு
எந்தையுமாய் உடன்தோன்றினராய்
மூன்றாய் உலகம்
படைத்துகந்தான் மனத்துள்ளிருக்க
ஏன்றான் இமையவர்க்கு அன்பன்
திருப்பாதிரிப் புலியூர்த்
தோன்றாத் துணையாய் இருந்தனன் தன்
அடியோங்களுக்கே.
- தேவாரம் (அப்பர்)
அம்மையே
அப்பா
ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்ம்மையே பெருக்கிப் பொழுதினைச் சுருக்கும்
புழுத்தலைப் புலையனேன் தனக்குச்
செம்மையே ஆய
சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப் பிடித்தேன்
எங்கெழுந் தருளுவ
தினியே
- திருவாசகம் (மாணிக்கவாசகர்)
அறிவானும் தானே
அறிவிப்பான் தானே
அறிவாய் அறிகின்றான் தானே
- அறிகின்ற
மெய்ப்பொருளும் தானே
விரிசுடர் பார்
ஆகாசம்
அப்பொருளும் தானே
அவன்.
- அற்புதத் திருவந்தாதி (காரைக்காலம்மையார்)
கற்பனை
கடந்த
சோதி
கருணையே உருவமாகி
அற்புதக் கோல
நீடி
அருமறைச் சிரத்தின் மேலாம்
சிற்பர
வியோமமாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடஞ்செய்கின்ற பூங்கழல் போற்றி
போற்றி.
- பெரிய புராணம் (சேக்கிழார்)
பூத்தவளே
புவனம்
பதினான்கையும் பூத்தவண்ணம்
காத்தவளே பின்
கரந்தவளே கறைக்கண்டனுக்கு
மூத்தவளே என்றும் மூவா
முகுந்தற்கு இளையவளே
மாத்தவளே உன்னையன்றி மற்றோர் தெய்வம் வந்திப்பதே.
தனம்
தரும்
கல்வி
தரும்
ஒருநாளும் தளர்வறியா
மனம்
தரும்
தெய்வவடிவும் தரும்
நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்
தரும்
நல்லன
எல்லாம் தரும்
அன்பர்
என்பவர்க்கே
கனம்
தரும்
பூங்
குழலாள் அபிராமி கடைக்கண்களே.
- அபிராமி அந்தாதி (அபிராமி பட்டர்)
கருமமும் கரும
பலனும்
ஆகிய
காரணன்
தன்னை
திருமணி வண்ணனைச் செங்கண்மாலினைத் தேவபிரானை
ஒருமை
மனத்தினுள் வைத்து
உள்ளம்
குழைந்தெழுந்தாடி
பெருமையும் நாணும்
தவிர்ந்து பிதற்றுமின் பேதமை
தீர்ந்தே.
நின்றவாறும் இருந்தவாறும் கிடந்தவாறும் நினைப்பரியன
ஒன்றலா
உருவாய் அருவாய
நின்
மாயங்கள்
நின்று
நின்று
நினைக்கின்றேன் உன்னை
எங்ஙனம் நினைகிற்பன், பாவியேற்கு ஒன்று
நன்கு
உரையாய் உலகமுண்ட ஒண்சுடரே.
கண்டோம்
கண்டோம் கண்டோம்
கண்ணுக் கினியன
கண்டோம்
தொண்டீர் எல்லீரும் வாரீர்
தொழுது
தொழுது
நின்றார்த்தும்
வண்டார் தண்ணந்துழாயான்
மாதவன்
பூதங்கள் மண்மேல்
பண்தான் பாடிநின்று ஆடிப்
பரந்து
திரிகின்றனவே.
- திருவாய்மொழி (நம்மாழ்வார்)
அன்பே
தகளியா
ஆர்வமே
நெய்யாக
இன்புருகு சிந்தை
இடுதிரியா - நன்புருகு
ஞானச்சுடர் விளக்கு ஏற்றினேன் நாரணற்கு
ஞானத்தமிழ் புரிந்த நான்.
- திவ்யப் பிரபந்தம் இயற்பா (பூதத்தாழ்வார்)
ஓங்கி
உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி
நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு
பெருஞ்
செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில்
பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல்
பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்.
- திருப்பாவை (ஆண்டாள்)
எம்பெருமான் துணையிருக்கட்டும்.
வாழ்க
வளமுடன். வாழ்க
வையகம்.
”மெய்ப்பொருள் காண்ப தறிவு"
Labels: ”மெய்ப்பொருள்"