திருஈங்கோய மலை
சிறப்பு : இந்த தலம் 108 சிவ ஆலயங்களில் ஒன்று..
இடம் : திருச்சி - சேலம் பேருந்து நெடுஞ்சாலையில் 42.5 கீ.மீ தொலைவில் உள்ளது.
பெயர் விளக்கம் : தமிழ் குருவாகிய அகத்திய ஹயக்ரீவரிடம் "ஸ்ரீ லலிதா தீஷை, லலிதா ஸஹஸ்ர நாமம் ஆகியவற்றை உபதேசமாக பெற்றுக்கொண்ட தலம் .பின்னர் தாம் தவம் செய்ய ஏற்ற இடம் என்று உணர்ந்து "தேன் ஈ" வடிவமாக இருந்து தவம் செய்து கொண்டு இருப்பதால், இந்த இடத்திற்கு திருஈங்கோய மலை என பெயர் வந்தது.
ஸ்தல விளக்கம் : இங்கு மலைமேல் இறைவன் சிவபெருமானின் லிங்கம் அமைந்துள்ளது. இந்த இடத்தில கால் பதிக்கின்றனரோ அவரின் பாவங்கள் விலகுவதாக கூறப்படுகிறது.
இந்த மலையின் அடிவாரத்தில் லலிதாம்பிகை பீடம் உள்ளது. இந்த இடம் முக்கிய வழிபாட்டு இடமாக உள்ளது. இங்கு ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. பக்தர்களின் நலன்கருதி இங்கு ஹோமங்கள் நடத்தப்படுகிறது. கைவிடப்பட்ட குழந்தைகளுக்கு இங்கு பள்ளி அமைத்து பாடம் சொல்லி தரப்படுகிறது.
இங்கு கடவுள் பெண் தன்மையாக போற்றப்படுகிறது. லலிதாம்பிகை முதல் கடவுளாக கொண்டு இங்கு பூஜைகளும், பல நற்காரியங்களும் நடத்தப்படுகிறது. மனதிற்கு அமைதி தரும் ஒரு அற்புதமான ஒரு இடம்.
ஸ்தல வரலாறு புத்தகம், லலிதாம்பிகையின் புத்தகம் கொடுக்கப்பட்டுள்ளது.
திருஈங்கோய மலையின் சில படங்கள்....