புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

ஒரு யோகியின் சுய சரிதம்


மஹா அவதார் பாபாஜியைப் பற்றியும் , அவரது சீடர்களைப் பற்றியும் தெரிந்து கொள்வதற்கு இந்த புத்தகம் ஒரு பொற்களஞ்சியம். இந்த புத்தகத்தை எழுதியவர் பரமஹம்ச யோகானந்தர். இவர் பாபாஜியின் ஒரு சீடர் ஆவார்.

மஹா அவதார் பாபாஜியின் மேன்மைகளும், லீலைகளும், அவருடைய கருணை  மிகுந்த உள்ளமும்(காருண்ய ரூபா - கருணை மிகுந்தவர் ) இந்த புத்தகத்தில்   விவரிக்கப்பட்டுள்ளது.

"Autobiography of Yogi " என்ற புத்தகத்தின் தமிழாக்கமே "ஒரு யோகியின் சுய சரிதம் " என்று வெளியிடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மனிதனாலும் படிக்கப்பட வேண்டிய ஒரு புத்தகம்.

நான் படித்த அனுபவத்தில் கூறுகிறேன், அவருடைய எழுத்துக்களில் கரைந்து போனேன். இந்த புத்தகத்தை படிக்க ஆரம்பித்து விட்டால் , நேரம் போவது தெரியாது. என்னை சுற்றி நடப்பது என்னவென்று என்னால் அறிய  இயலாது. எந்த நிகழ்ச்சியை யோகானந்தர் விவரிக்கிறாரோ அந்த இடத்திலேயே சென்று  பார்ப்பது போல ஒரு அனுபவம்.

காரணம் என் குருவை(பாபாஜியை) தேடும் ஏக்கத்தினால். ஒரு முறையாவது என் எதிரினில் தோன்ற மாட்டாரா என்ற ஒரு அவா. உன்னுடன் தான்  நான் இருக்கிறேன் என்று பாபாஜி என்வாழ்வில் நடத்தும் லீலைகள். பாபாஜியை நினைத்த மாத்திரத்திலேயே, அவரிடம் இருந்து எனக்கு வரும் பதில்கள் .

யார் அறிவார் பாபாஜியின் லீலைகளை... 

உணர்ந்து பாருங்கள் உங்களுக்கு உண்மை  புரியும்.அவரின் சக்தியை தங்களால் தெரிந்து  கொள்ள இயலும்.

"இது மாயை நிறைந்த உலகம். 

ஆசையே  மாயை, மாயையே ஆசை (வாசனா ஆசைகள் )" 
~மஹா அவதார் பாபாஜி 

0 comments:

Post a Comment

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthik rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.