புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

புதுவை அன்னையின் வழிபாடு பாடல்


மலர் போல மலர்கின்ற மனம் வேண்டும் தாயே!
பலர் போற்றிப் பாராட்டும் குணம் வேண்டும் தாயே!
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே
வரம் தரும் அன்னையே! வணங்கினோம் உன்னையே (மலர் போல…)ஒரு நோயும் தீண்டாமல் அணைபோடு தாயே!
நதி காய நேராமல் நீருற்று தாயே!
நல் நிலம் பார்த்து தாயே!
எளியோர்கள் மகிழ்வாக்க வழிகாட்டு தாயே!
வலியோர்கள் வாட்டாமல் வகை காட்டு தாயே!
என் வளமான தாயே!
பசி தாகம்  காணாமல் பயிராக்கு தாயே!
ரசிப்போர்கள் செவி தேடி இசையூட்டு தாயே!
இசைப் பாட்டை என்றென்றும் இனிப்பாக்கு தாயே! (மலர் போல…)

 


புகழ் செல்வம் நலம் கல்வி குறைவின்றி வாழ
புவி மீது இறைஞானம் எமை என்றும் ஆள
திரு குறையாமல் வாழ
அருளோடு பொருள் பேத அறிவோடு ஞானம்
தெளிவோடு தினம் காணும் நிலை வேண்டும் வேண்டும்
அது திரளாக வேண்டும்
பல வீடு பல நாடு பல தேசம் என்று
உணராமல் வாழ்வோரை  ஒன்றாக்கு தாயே!
உறவோடு மகிழ்வோடு எனை மாற்று தாயே! (மலர் போல…)

(நன்றி: கங்கை அமரன்)


ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆசிரமம்

ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை ஆசிரமம்   
(புதுவை மணக்குள விநாயகர் கோவிலின் அருகில் அமைந்துள்ளது) 
ஸ்ரீ அரவிந்தர் சுவாமிகளின் பீடம் டிலாமரைன் மற்றும் மணக்குள  விநாயகர் கோவில் வீதி சந்திப்பில் அமைந்துள்ளது. இவர் சிறந்த உயர் கல்வி கற்றவர். பேராசிரியராய் விளங்கியவர். இந்திய விடுதலைப் போராட்டத்தில் சிறை சென்றவர். பின் அமைதிக்காக புதுச்சேரியை அடைந்து பாரதியாரை சந்தித்து மிகுந்த மரியாதைக்குரிய நண்பராக வாழ்ந்தவர்.

அமைதி இல்லாத சூழ்நிலையில் புதுச்சேரிக்கு வந்த அரவிந்தருக்கு புனித பூமி புத்துணர்வு ஊட்டியது. இங்கு இவர் கீதைகளையும், பல இதிகாசங்களையும், வேதங்கள் பலவற்றை அமைதியாக படித்து பின்பு பாரதியாருடன் தினசரி மணிக்கணக்கில் வேதங்களை பற்றி கருத்து பரிமாறிக்கொள்வார்.

இவர் சூர்யா என்ற ஆன்மீக இதழை பிரெஞ்சு மற்றும் ஆங்கில மொழியில் தொடங்கினார். பின்பு உலக பந்தத்தில் இருந்தும், வெளிஉலக தொடர்புகளிலிருந்தும் , முற்றிலும் தம்மை விடுவித்துக் கொண்டு பல ஆண்டுகள் தவம் இருந்தார். 4 .12 .1950  ஆண்டு தெய்வீக நிலையை அடைந்தார்.   

ஸ்ரீ அரவிந்தர் திரு உருவம்.
ஸ்ரீ அன்னை திரு உருவம்.
இயற்பெயர் : மீரா.

 அன்னையின் சிறியவயது புகைப்படம்.ஆசிரமத்தில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களது சமாதியின் தோற்றம்

மகான் ஸ்ரீ வண்ணர பரதேஸ்வர் சுவாமிகள் சித்தர் பீடம்

மகான் ஸ்ரீ வண்ணர பரதேஸ்வர் சுவாமிகள் சித்தர் பீடம்
(ஒதியம்பட்டு, வில்லியனூர்-முருங்கப்பாக்கம் சாலை)
 

                                       சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம். 


                      மகான் ஸ்ரீ வண்ணர பரதேஸ்வர் சுவாமிகள் திரு உருவம்.
         மகான் ஸ்ரீ வண்ணர பரதேஸ்வர் சுவாமிகள் பெருமை சொல்லும் பாடல்  


  உற்று பாருங்கள் உண்மை புரியும்.

 

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகள் (Sri Dhatchina Moorthi Swamigal )

ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் செல்லும் நேர்  வழிபாதையில் தென்னல் என்னும் கிராமத்தில் அருகில் உள்ள அய்யனார் கோவிலுக்கு வலப்புறம் உள்ள குளக்கரையில் ஒரு சின்ன கீற்று கொட்டகையில் உள்ளது.

இவருடைய சிறப்பு வெளி ஊரில் நிகழும் நிகழ்சிகளை தான் நேரில் பார்ப்பது போல கூறும் திறன் உடையவர். ஒவ்வொரு மனிதனின் மனதின் எண்ண ஓட்டங்களை மிகத்துல்லியமாக கூறுவார்.

இவர் 7.7.1909  வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் முக்தி அடைந்தார். குரு பூஜை ஆனி மாதம் 26 -ம் தேதி மிக சிறப்பாக வடை பாயசத்துடன் அன்னதானம் நடத்துகிறார்கள். 
               சித்தர் பீடம் குளக்கரையின் அருகில் அமைந்து உள்ளது.
 
இது கோவிலின் முகப்பு தோற்றம்.
 
         சித்தர் பீடத்தின் அருகே காணப்படும் சிவன் கோவில்.

ஸ்ரீ குருசாமி அம்மையார் சித்தர் பீடம்

ஸ்ரீ குருசாமி அம்மையார் பீடம் விழுப்புரம் பெருஞ்சாலையில் உள்ள புதுவை மாநிலம் அரியூரில், சாலையின் வலது புறத்தில் சமரச சுத்த சன்மார்க்க சங்கம் என்ற வளைவுடைய கட்டிடத்தில் அமைந்து  உள்ளது.

இங்குள்ள சிறப்பு ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் மிளகாய் அரைத்து  நீரில் கரைத்து குருசாமி அம்மையாருக்கு அபிஷேகம் செய்வார்களாம். தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.

                                        சித்தர் பீடத்தின் முகப்பு தோற்றம் 
                                     ஸ்ரீ குருசாமி அம்மையார் ஜீவ சமாதி
                      கோவிலை பாதுகாக்க இருக்கும் பைரவ வாகனங்கள் 
                                    ஸ்ரீ குருசாமி அம்மையார்  உருவ படம்

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்தர் பீடம் (Sri thengai swamigal )

                                         சித்தர் பீடத்தின் முகப்பு தோற்றம்
                                      தேங்காய் சுவாமிகளின் உருவ  படம் 


ஸ்ரீ தேங்காய் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் சாலையில், வில்லியனூர் துணை மின்நிலையத்தின் எதிரில் ஒரு சிறிய தகர கொட்டகையில் உள்ளது.

ஸ்ரீ தேங்காய் சுவாமிகளிடம் வரும் பக்தர்கள் தேங்காயுடன் வருவார்கள்.அதை அவர் உடைத்து அந்த மூடியின் உள்ளே வெள்ளை பகுதியில் இவர் கண்களுக்கு மட்டும் தெரியும் எழுத்துக்களை படித்து மக்கள் மனதில் உள்ளவற்றை கூறுவார். பின் அந்த மூடியின் ஒரு பகுதியை எடுத்து சென்று பூஜையில் வணங்க எல்லா துயரமும் போகுமாம்.

இதனால் இவரை தேங்காய் சுவாமிகள் என்று அழைத்தார்கள். ஒவ்வொரு மாதமும் முதல் திங்கள் கிழமை விசேஷ பூஜையும் செய்து சிறப்பித்து வருகிறார்கள்.

ஸ்ரீ அக்கா சுவாமிகள் சித்தர் பீடம் ( Sri Akka Swamigal)


                                               கோவிலின் முகப்புத் தோற்றம்
முத்தியால்பேட்டை வாழைக்குளம் பகுதியில் உள்ள குதிரைகுளத்திற்கும் செங்கேனியம்மன் கோவிலுக்கும் நடுவே இவர் ஜீவ சமாதி உள்ளது.

இவர் தமிழ் ப்ரமோதூக ஆண்டு ஆனி மாதம், ஆங்கில வருடம் 1872  ஜூன் மாதம் ஜீவ  சமாதி அடைந்தார். இவர் எல்லோரையும் அக்கா அக்கா என்று அழைப்பதை பார்த்தவர்கள் இவரை அக்கா சாமியார் என்றும்   அக்கா பரதேசி  அழைத்தனர்.

ஸ்ரீ மகான் படே சாஹிப் ( Sri Bade Saheb )

ஸ்ரீ அழகப்பர் சுவாமிகளின் சித்தர் பீடம்( Sri Azhagappar siththar)


ஸ்ரீ அழகப்பர் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுச்சேரியில் இருந்து நல்லாத்தூர் வழியாக விழுப்புரம் செல்லும் சாலையில் நல்லாத்தூர் - தூக்கினாம்பாக்கம் இடையில் ஒரு ஏரிக்கரையில் தென்னம்பாக்கம் என்ற கிராமத்தில் உள்ளது.


இங்கு அழகு முத்தையனார் என்னும் இறைவன் பொற்கலை, பூரணியோடு  தம் பரிவாரபோர் வீரர்களோடும் காட்சி அளிக்கிறார். இங்கு சிறப்பு, பிள்ளை இல்லாதவர்கள்  பிள்ளைபேறு அடைவதற்காக, அதுவும் தமக்கு எப்படிப்பட்ட பிள்ளை வேண்டும் என்பதனை கற்பனை செய்து அவ்வண்ணமே ஒரு சிலையை செய்து காணிக்கையாக அளிப்பர்.

இந்த சித்தர் தினமும் கிணற்றில் தியானம் செய்யும் பழக்கம் உடையவர். ஒருநாள் நீரினுள் ஜீவ சமாதியாகி விட்டார். குருபூஜை ஒவ்வொரு வருடமும் சித்திரை முதல் திங்கள் கிழமை நடைபெறும். இங்கு அன்னதானம் மிகவும் விசேஷம்.    


                                              சித்தர் பீடத்தின் முகப்பு தோற்றம்.

பரமஹம்ச யோகானந்தா (Paramahansa Yogananda)

                                              (மஹா  அவதார்  பாபாஜியின்  சீடர்)  
பிள்ளை பருவம் :
இவர் ஜனவரி மாதம்,5 -ம் தேதி,1893 -ம் ஆண்டு இந்தியாவில், உத்ரப்ரதேச மாநிலத்தில், கோரக்பூரில் பிறந்தார். இவரின் இயற்பெயர் முகுந்தா லால் கோஷ்.

சிறிய வயதில் இருந்தே ஆன்மீகத்தில் ஈடுபாடு கொண்டவர். இந்திய ஞானிகளையும்,முனிவர்களையும் பார்த்து ஆன்மீகத்தில் நாட்டம் கொண்டார்.
1910 -ல், 17 வயதுஆக இருக்கும் போது சுவாமி ஸ்ரீ யுக்தேஸ்வர் கிரியை கண்டார். பின்னர் அவரது சீடராக மாறினார். அவரை முதல் தடவை பார்த்த போதே, ஜென்ம, ஜென்ம தொடர்புகள் கொண்டதாக உணர்ந்தார். 

அதன் பிறகு சுவாமி யுக்தேஸ்வர், "உன்னை என்னிடம் கொண்டுவந்தது மஹா அவதார் பாபாஜி தான். ஒரு முக்கியமான காரணத்திற்கு தான் என்னிடம் உன்னை வரவைத்தார்."

இளமை பருவம் :

சிரம்பூரில் உள்ள கல்கத்தா பல்கலைகழகத்தில் இளங்கலை படித்து முடித்தார். இதனால் அங்கு அமைந்துள்ள யுக்தேஸ்வர் ஆசிரமத்தில் செலவிட அதிக நேரம் கிடைத்தது. 
1915 -ல் காவி நிற ஆடை அணிந்தார். எனவே மக்களால் இவர் சுவாமி யோகானந்தா என்று அழைக்கப்பட்டார்.

1917-ல், டிஹிகா என்னும் இடத்தில் ஆண்களுக்கான ஒரு பள்ளியை அமைத்தார். இங்கு பாடங்களோடு சேர்த்து, யோக முறைகளும் கற்று தரப்பட்டது. ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த பள்ளி ராஞ்சிக்கு மாற்றப்பட்டது.  காலப்போக்கில்   இந்த பள்ளி யோக சங்கமாக மாறியது.

1920 -ல் அமெரிக்காவிற்கு இந்திய சமய தூதராக அனுப்பபட்டார்.  உலகம் முழுவதும் சொற்பொழிவுகளை நடத்தினார். 1936 -ல் யுக்தேஸ்வரால்  "பரமஹம்ச" பட்டம் சூட்டப்பட்டு "பரமஹம்ச யோகானந்தர்" என்று அழைக்கப்பட்டார்.   இந்தியாவிலும் ஆன்மீக சொற்பொழிவுகளையும் மேற்கொண்டார். 

இக்காலத்தில்தான் மஹா அவதார் பாபாஜியைப் பற்றி கூறும் நூலாகிய "ஒரு யோகியின் சுயசரிதை" ஆங்கிலத்தில் எழுதினார். மகா அவதார் பாபாஜி தன்னை உலகம் அறிய செய்ய யோகானந்தரை மற்றொரு கருவியாக பயன்படுத்தினார். க்ரியா யோக நிலைகளை எடுத்து உரைக்கும் நூலாக அது விளங்கியது.
ஒரு யோகியின் சுயசரிதை புத்தகத்தில்,தனது குருவான மஹா அவதார் பாபாஜியை நேரில் கண்டதாக கூறியுள்ளார்.

கடைசி நாட்கள் :

தன்னுடைய கடைசி நாட்களை அமெரிக்காவில் கழித்தார்.இவரின் கடைசி சொற்பொழிவு அமெரிக்காவில் உள்ள திரு.சென்(இந்திய தூதர்) இல்லத்தில் நடைப் பெற்றது. 1952 -ம் வருடம், மார்ச் 7 -ம் தேதி திரு.சென் வீட்டிலேயே இறைவன்அடி சேர்ந்தார். அவரது உடல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள சவக்கிடங்கில், இந்திய சீடர்கள் வரும் வரை வைக்கப்பட்டது.

உயிர் பிரிந்து 20 நாட்கள் ஆகியும் அவரது உடலில் இருந்து எந்தவித துர்நாற்றமும் வீசவில்லை,தோலும் சுருங்கவில்லை. உடல் எந்தவித மாற்றமும் இல்லாமல் இருந்தது. இதைக்கண்ட அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பத்திரிகைகள்   மிக ஆச்சரிய, சிறப்பு செய்தியாக வெளிஇட்டன.

ஸ்ரீ லாஹிரி மகாசாயா (Lahiri Mahasaya )


                                          (மஹா  அவதார்  பாபாஜியின்  சீடர்) 
 மஹா அவதார் பாபாஜி இந்த உலகத்திற்கு தெரிய, பாபாஜி  பயன்படுத்திய முதல் கருவி லாஹிரி மஹா சாயர் தான்.மஹா அவதார் பாபாஜி முதலில் காட்சி கொடுத்தது இவருக்கு தான். க்ரியா யோகத்தை முதலில் பாபாஜி கற்று கொடுத்தது இவருக்கே. இவரின் இயற்பெயர் ஷாமா சரண் லாஹிரி. அனைவரும் இவரை லாஹிரி மகாசாயா  என்று அழைத்தார்கள்.(மகாசாயா என்றால் விசாலமான அறிவு உடையவர் என்று பொருள் ).

 குழந்தை பருவம் :

இவர் 30 தேதி, செப்டம்பர் மாதம்,1828 -ல் வங்காள மாநிலம், நதியா மாவட்டத்தில்,  குர்னி என்ற கிராமத்தில் பிறந்தார்.இவரது பெற்றோர் கௌர் மோகன் லாஹிரி மற்றும் முக்தாக்ஷி .பிராமண குடும்பத்தை சேர்ந்தவர். அவரின் சிறுவதிலேயே, அவரின் அன்னை இறந்து விட்டார்.   லாஹிரி மகாசாயர்  ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு கொண்டவர். நான்கு வயதில் இருந்தே தியானம் செய்வதைக் கற்றுக் கொண்டார். தலையைத் தவிர மற்ற உடல் பகுதி முழுவதும் மண்ணுள் புதைத்துக் கொள்ளும் தியான முறையை கையாண்டார்.

அவரது வீடு, ஒரு பெரும் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டது. ஆகவே அவர் குடும்பதினோடு வாரணாசிக்கு சென்றார்.தான் வாழ்நாளின் மீத பகுதியை அங்கேயே கழித்தார். பிள்ளை பருவத்திலேயே ஹிந்தி, உருது அறிந்திருந்தார். பின்னர் பெங்காலி, சமஸ்கிருதம், பாரசீகம்,பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தை அரசு சமஸ்கிருத கல்லூரியில் கற்று கொண்டார். கங்கையில் நீராடி விட்டு, வேதங்களையும், புராணங்களையும் அங்கேயே கற்று கொண்டார்.
   
இளமைப் பருவம் :  

கல்லூரி படிப்பு முடிந்தவுடன் ,ஆங்கிலேய ராணுவத்தில் கணக்காளராக பணி ஆற்றினார்.  1846 -ல் ஸ்ரீமதி காஷி மோனி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள், இரண்டு பெண் குழந்தைகள்.
லாஹிரி மாஹசாயரின் தந்தை இறந்த பின், குடும்ப பொறுப்பை தானே ஏற்றார்.

1861 -ல், இமாலயத்தின் அடிவாரத்தில் உள்ள  "ராணிகெட்" என்ற இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டார். அதுதான் அவர் வாழ்கை முறையில் ஒரு திருப்பத்தைக் கொண்டு வந்தது. 

 மஹா அவதார் பாபாஜி ஆட்கொள்ளல் :
 
ஒரு நாள் அவர் மலைப் பாதையில் நடந்து  கொண்டிருக்கும் போது ஒரு குரல் அவரை அழைத்தது. மேலும் அவர் அக்குரலை கேட்டுக் கொண்டே மலையின் மீது ஏறிச் சென்றார். அப்போது தான், க்ரியா யோகத்தின் ஒளி விளக்கான " மஹா அவதார் பாபாஜி"யை சந்தித்தார். 

அப்போது  அவரை மஹா அவதார் பாபாஜி தன் முதல் சீடராக ஏற்றுகொண்டார். கிரியா யோக வித்தைகளை  அவருக்கு கற்று தந்தார். உலகுக்கு  எல்லாம்  க்ரியா யோகத்தைப் பரப்புமாறு மஹா அவதார் பாபாஜி, லாஹிரி மகாசாயருக்கு கட்டளை இட்டார். 

பின்பு அவர் வாரனாசிகே திரும்பி வந்து, க்ரியா யோகத்தைப் பற்றியும், மஹா அவதார் பாபாஜியை பற்றியும் எல்லாருக்கும் எடுத்து உரைத்தார். அங்குள்ள அனைத்து மக்களும் க்ரியா யோகத்தை தெரிந்துகொள்ள முனைந்தனர்.

லாஹிரி ஒரு குழுவை அமைத்து பகவத் கீதையை  பற்றியும், க்ரியா யோகத்தையும் பற்றி மக்கள் அறியுமாறு செய்தார். க்ரியா யோகத்திற்கு மதம் முக்கியம் இல்லை. ஆகவே இந்து,முஸ்லிம், கிறிஸ்து ஆகிய மதத்தினருக்கும் கற்று தரப்பட்டது.

1886 வரை    க்ரியா யோகத்தின் ஆசிரியராக விளங்கினார். பின்பு அனைத்து மக்களும் அவரது தரிசித்து சென்றனர். 26 செப்டம்பர், 1895 -ல் , தன் அறையில் அமர்ந்து யோகம் செய்து கொண்டிருக்கும் போது, அனைவரது பார்வையின் எதிரே யோக நிலையிலேயே இறைவன் அடிசேர்ந்தார்.

இவருக்கு பின், அவரின் சீடர்களான ஸ்ரீ பஞ்சனன் பட்டாச்சார்யா, ஸ்ரீ பரமஹம்ச யோகானந்தர், ஸ்ரீ யுக்தேஸ்வர், சுவாமி பிரபானந்தா, சுவாமி கேஷபானந்தா போன்றோரால் க்ரியா யோகம் மக்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டது.

மஹா அவதார் பாபாஜி குகையை நோக்கிய ஒரு பயணம் (way to mahavatar babaji cave)

                        
                                               "ஓம் கிரியா பாபாஜி நம ஓம்:"

நாம் இப்போது கிரியா பாபாஜி குகையை நோக்கி பயணிக்க போகிறோம்.
மஹா அவதார் பாபாஜியை வணங்கிவிட்டு நம் பயணத்தை  தலைநகர் டெல்லியில் இருந்து ஆரம்பிப்போம்.

டெல்லி : இந்தியாவின் தலைநகர். பல மன்னர்களும், மொகலாயர்களும் ஆண்ட பூமி. ராமாயணம், மகாபாரதம் போன்ற சரித்திரங்களோடு தொடர்புடையது.  பாண்டவர்கள் ஆண்ட அஸ்தினாபுரத்தை பார்த்து கட்டப்பட்ட நகரம். இந்த நகரத்திற்கு பல பெயர்கள் இருந்தன. முதலில் காண்டபிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது. பின்னர் இந்திரப்ரஸ்தம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தற்போது புதுடெல்லி என்று அழைக்கப்படுகிறது.

    

இது புதுடெல்லியில் உள்ள இந்தியாவின் கதவு. 
இப்போது நாம் பயணிக்க வேண்டியது டெல்லியில் இருந்து ஹரிதுவாருக்கு.

தேசிய நெடுஞ்சாலை (NH -58) வழியாக 205 கீ.மீ , சுமார் 3 மணி 20 நிமிட பயணத்தில் நாம் ஹரிதுவார் அடைந்து விடலாம்.  

ஹரிதுவார் : ஹரிதுவார் என்றால் "கடவுளை அடையும் வழி" என்று பொருள். இங்கு விஷ்ணு வந்து கால் பதித்ததாக நம்பிக்கை உண்டு. இந்த ஊரின் முகப்பில் தென்னிந்திய ஸ்தபதி கட்டிய மிக உயரமான சிவனின் சிலையை காணலாம்.கும்ப மேளா நடக்கும் நான்கு  முக்கிய இடங்களில் ஹரிதுவாரும் ஒன்று.

 

ஆதி அந்தம் இல்லா பரம்பொருளே ......
"ஹர ஓம் நமசிவாய"
இப்போது ஹரிதுவாரிலிருந்து கிளம்பி ரிஷிகேஷ்க்கு  செல்வோம்.  

   ஹரிதுவார்-ரிஷிகேஷ் செல்லும் வரைபடம். 

ஹரிதுவாரிலிருந்து தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 16 .2 கீ.மீ தொலைவில், 30 நிமிடங்களில் ரிஷிகேஷ் அடைந்து விடலாம்.
 
ரிஷிகேஷ் : சாதுக்கள் நிறைந்த பூமி. எங்கு பார்த்தாலும் துறவிகளும்,சாதுக்களும் தெரிவார்கள். ஏதோ பழைய காலத்தில் இருந்த நகரத்திற்குள் நுழைவது போல் ஒரு எண்ணம் தோன்றும். யோக உலகத்தின் தலைநகரமாக ரிஷிகேஷ் கருதப்படுகிறது.


ரிஷிகேஷில் உள்ள சிவனின் சிலை.இப்போது ரிஷிகேஷில் இருந்து ருத்ரபிரயாகை நோக்கி பயணிக்க வேண்டும்.


ரிஷிகேஷ் - ருத்ரபிரயாகை செல்வதற்கான வரைபடம்.

ரிஷிகேஷிலிருந்து  தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 143  கீ.மீ தொலைவில், 3 மணி 10 நிமிடங்களில் ருத்ரபிரயாகை அடைந்து விடலாம்.

ருத்ரபிரயாகை :   பாண்டவர்கள் தாங்கள் செய்த தவறுக்காக சிவனிடம் மன்னிப்பு கேட்க வந்த போது சிவன் கோபமுற்றார். அந்த இடமே தற்போது ருத்ரபிரயாகை என்று அழைக்கப்படுகிறது. 


அலக்நந்தா நதியும், பஹீரதி நதியும் கலக்கும் இடம். இந்த இடம் கங்கையின் மிகுந்த சீற்றமிக்க இடமாக காணப்படுகிறது. 

இப்போது ருத்ரபிரயாகையில் இருந்து கர்ணப்ரயாகைக்கு பயணிப்போம்.


ருத்ர பிரயாகை - கர்ணப்ரயாகை செல்லும் வழிக்கான வரைபடம்.

ருத்ரபிரயாகையில் இருந்து   தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 32 கீ.மீ தொலைவில், 45   நிமிடங்களில் கர்ணப்ரயாகையை அடைந்து விடலாம்.

கர்ணபிரயாகை : கர்ணன் இங்கு வந்து சூரியனை நோக்கி தவம் செய்து, சக்தி பெற்றதாக வரலாறு கூறுகிறது.

கர்ணபிரயாகையில் நதி ஓடும் காட்சி   

 நாம் கர்ணபிரயாகையில் இருந்து துரோணகிரி மலைக்கு பயணிப்போம். 

கர்ணபிரயாகை - துரோணகிரி மலைக்கு செல்லும் வரைபடம்.
கர்ணப்ரயாகையில் இருந்து   தேசிய நெடுஞ்சாலை வழியாக (NH -58 ) சுமார் 76 கீ.மீ தொலைவில், 1 மணி 30  நிமிடங்களில் துரோணகிரி  மலையை அடைந்து விடலாம்.


 
துரோணகிரி மலை : தங்கள் முன்னால் தெரிகிறதே இதுதான் துரோணகிரி மலை. இதிகாசங்களில் வர்ணிக்கப்படும் சஞ்சீவினி   மலை இதுதான். அன்று இந்த்ரஜித்தால் தாக்கப்பட்ட லட்சுமணனின் உயிர் காக்க, அனுமன் தூக்கிவந்த மலைதான் இந்த சஞ்சீவினி  மலை. 

உயிர்  காக்கும் மற்றும் வாழ்நாளை நீட்டிக்கும் சஞ்சீவினி மூலிகைகள் நிறைந்த மலை. இங்குதான் வாழ்நாளை  நீட்டிக்கும் கிரியா யோகத்தின் ஒளி விளக்கான மஹா அவதார் பாபாஜியின் குகையும் உள்ளது. ஆபத்து நிறைந்த மலை பகுதி. இனி மலையின் மேல் நம் பயணத்தை தொடருவோம். 


இந்த  மலையில் ஆபத்தான வளைவுகள் உள்ளன. மிகவும் ஜாக்கிரதையாக பயணிக்க வேண்டும். போகின்ற வழியில் ஒரு ஆதி பத்ரிநாத் கோவில் ஒன்று உள்ளது. 

பாண்டவர்கள் காலத்திய கோவில் இது.  திரௌபதி தன் கவலை மறக்க இங்கு வந்திருக்கலாம், கர்ணன் மனம் உடைந்து வந்திருக்கலாம், அர்ஜுனன் தான் வெற்றி பெற்ற மமதையில் வந்திருக்கலாம். காந்தாரி தன் கையால் தொட்டு உணர்ந்து இருக்கலாம். காலத்தை வென்று நிற்கும் இந்த கோவில்,பல காப்பியங்களை தன்னுள் அடக்கியுள்ளது.      

ஒரு குறிப்பிட்ட தொலைவிற்கு மேல் நாம் வாகனத்தில் செல்ல இயலாது. அங்குள்ள ஒரு ஜீப்பில் தான் செல்ல வேண்டும். 

கர்ணம் தப்பினால் மரணம் என்று தான் இந்த ஜீப்பில் பயணிக்க வேண்டும். மிக மிக குறுகலான ஆபத்தான பாதை இது.சிறிது தூரம் சென்றவுடன் ஜீப்பும் நின்று விடும். இனிநாம் நடந்து தான் செல்ல வேண்டும். சுமார் 2  கீ.மீ நடக்க வேண்டி இருக்கும். செல்லும் பாதை ஒற்றை அடி பாதை. கையில் ஒரு ஊன்று  கோலை வைத்துதான் நடக்க வேண்டும். 
போகிற வழியில் காணப்படும் வழி காட்ட உதவும் பலகைகள். போகிற வழியில் ஒரு அருவி இருக்கிறது.

மூலிகை  தன்மை வாய்ந்த இந்த அருவியில் குளித்துவிட்டுத்தான் பாபாஜியை தரிசிக்க செல்ல வேண்டும். உடலும், மனமும் பரிசுத்தமாக இருக்க வேண்டியது அவசியம்.
  அங்கு உற்று பாருங்கள். வெள்ளையாக ஒரு இடம் தெரிகிறதா.....!
அங்குதான் முதன் முதலில் மஹா அவதார் பாபாஜி, ராணுவ அதிகாரியான லாஹிரி மகாசாயருக்கு   காட்சி அளித்தார். அவர்தான் பாபாஜியின் முதல் சீடர். இந்த இடம் தான் நாம் குகையை நெருங்கி  வந்தற்க்கான அடையாளம்.  

இரண்டு பாபாஜி குகை உள்ளது. சிறிய குகை ஒன்று மற்றொன்று பெரிய குகை.
சிறிய குகையில் பாபாஜியும், இரண்டு சீடர்கள் மட்டும் இருப்பார்கள். பெரிய குகையில் மற்ற சீடர்கள் இருப்பார்கள்.
இரண்டு மணிநேர நடை பயணத்திற்கு பின் நாம் பாபாஜியின் பெரிய குகையை அடைந்து விட்டோம்.


  பெரிய குகையின் தோற்றம். இங்கு வந்து தான் பாபாஜி அனைவருக்கும் போதனை செய்வார்.மிகவும் ரம்யமான இடம்.

இப்போது நாம் சிறிய குகைக்கு செல்வோம். இங்குள்ள யாரும் சிறிய குகையை காட்டி கொடுக்க மாட்டார்கள். புலிகள்,சிறுத்தைகள் நடமாடும் இடம் அது. இருந்தாலும் பரவாயில்லை நாம் அங்கு போவோம். இங்கிருந்து சிறிது தூரம் தான்.

இதுதான் சிறிய குகையின் வாசல்.சரிக்கிவிடும் பாதை இது. பார்த்து பொறுமையாக நடக்க வேண்டும். வாசலில் உள்ள படிகட்டுகள் போல இந்த இடம் அமைந்து உள்ளது.
மெல்ல உள்ளே நுழைவோம்.


கூர்மையான பாறைகள் உள்ளது. மேலும் இது மிகச்சிறிய வழி. அதனால் நாம் ஊர்ந்து, தவழ்ந்து தான் செல்ல வேண்டும்.

பொறுமையாக உள்ளே செல்வோம்.....

வந்து விட்டோம்...! ஆனந்தம்....!
இந்த குகைதான் மஹா அவதார் பாபாஜி தனக்கென்று பயன்படுத்துகிற குகை ஆகும்.
இங்கு ஒரு அதீத அலைகள் பரவுவதை நாம் உணரலாம். ஏனென்றால் பாபாஜியின்
தவ வலிமை உள்ள இடம்.

இன்னும் உள்ளே ஒரு நீண்ட பாதை செல்கிறது. அங்குதான் மஹா அவதார் பாபாஜி உள்ளார். இந்த சிறிய குகைக்கு வருவது  இலட்சத்தில் ஒருவருக்கு கிடைப்பதே பெரும் பாக்கியம்.மஹா அவதார் பாபாஜியின் அனுமதி இருந்தால் மட்டுமே இங்கு பிரவேசிக்க முடியும்.

"மஹா அவதார் பாபாஜி குகையில் இருக்கும் போது, நான் என் தாயின்  கருப்பையில் இருப்பதாக உணர்கிறேன்"
என்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

நான் உங்களை வெறும் வார்த்தைகளால் உங்களை இங்கு அழைத்து வந்துவிட்டேன். உண்மையில் நானோ, நீங்களோ நேரடியாக இந்த காட்சிகளை காண முடியுமா......!
காலம் பதில் சொல்லும்.........!

 பாபாஜியின் மீது நமக்கு அளவற்ற பக்தி, தூய உள்ளம்,உண்மையான அர்பணிப்பு இருந்தால், கவலை கொள்ளாதீர்கள், அவரே உங்களை அழைத்துச் செல்வார்.

                                                "ஓம் க்ரியா பாபாஜி நம ஓம் : " 
 
 
   

 

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthikeyan rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.