புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

மகா அவதார் பாபாஜி வரலாறு ( Mahavatar Babaji Histroy )

                                             "ஓம் கிரியா பாபாஜி நமஓம் "

 இயற்பெயர் : நாகராஜ்
அகத்திய முனிவர் மற்றும் ஆஞ்சநேயர்  போல் ,பாபாஜியும்  ஜீவ சஞ்சீவியாக மகா அவதாரமாக வாழ்கிறார். உலகமெங்கும் சென்று அருள் மழை பொழிந்து கொண்டு இருப்பவர்.பல ஞானிகளை உருவாக்கியவர்.

சித்தர் போகரின் அருமந்த சீடர் ! அஷ்டமா சித்திகளை பெற்றவர். பாபாஜி, போகரிடம் சிஷ்யராக, பல யோக சாதனைகளை, தியான கிரியைகளை பழகினார். பின் முருகப்பெருமானின் தரிசனம் பெற்றார்.

பொதிகை மலையில் அகத்தியரை நினைத்து  கடும்  தவம் இயற்றினார். அவர் காட்சி தரவில்லை. உடல் தளர்ந்த  போதிலும், மனம் தளராமல் அகத்தியரின் பெயரை உச்சரித்தவாறே இருந்தார்.

பின்பு அகத்தியர் காட்சி தந்து , பாபாஜிக்கு கிரியா, குண்டலினி, பிராணயாம தீட்சையை  அளித்து , பாபாவை பத்ரிநாத்துக்கு செல்லுமாறு பணித்தார். உலகம் அதுவரை அறிந்திராத ஒரு மாபெரும் சித்தராக பாபாஜி உருவாவதற்கு அன்று அகத்தியர்தான் அடித்தளம்  அமைத்தார்.  

இமய மலை தொடரில் உள்ள சஞ்சீவி மலையில், பாபாஜி கடும்தவம் செய்து "சொரூப சமாதி" அடைந்தார். பொன்னிற ஒளிவட்டம் அவரை சூழ்ந்து அமைந்தது. அவரது உடல் முதுமை, பிணி ஆகியவற்றில் இருந்து கடவுளின் அருளால் அறவே விடுபட்டது.

ஜீவாத்மாவின் கருவியாக,  பாபாஜி ஒரு சித்தராக, அரூபியாக மாறினார். அன்றில் இருந்து மக்களுக்கு இல்லறத்தில் இருந்து கொண்டே கிரியா யோகத்தை கற்று யோகிகளாக வாழ, வழிமுறை செய்தார். 

கிரியா யோகத்தின் ஒளி விளக்காக மகா அவதார் பாபாஜி திகழ்கிறார்.


பாபாஜி, மீண்டும் கிரியா யோகத்தை புத்துணர்ச்சி பெறசெய்து , பல தவ புருஷர்களான ஆதி சங்கரர், கபீர் தாஸ், லாகிரி மகாசாயர், யுக்தேஸ்வர், பரமஹம்ச யோகாநந்தர்  மூலமாக இல்லறத்தில் ஈடுபட்ட மக்களும் கிரியா யோகத்தைக் கற்று முக்தி நிலையை அடைய க்ரியா யோகத்தை கற்று தந்தார்.

க்ரியா யோகம் :  க்ரியா யோக பயிற்சியை தகுந்த குருவின் மூலமாக தீவிரமாக செய்தால், அவர் தனது பிறப்பு, இறப்பு கர்ம வினைகளை கட்டுபடுத்தி தெய்வீக நிலையை சீக்கிரமாக அடைய  முடியும். 

அரை நிமிடம் செய்யும் ஒரு கிரியா, ஒருவருட பிறப்பு - இறப்பு ஜென்மத்திற்கு சமமான கர்மவினைகளை குறைக்கும். எட்டரை மணி நேர கிரியா பயிற்சி, ஆயிரம் வருட  பிறப்பு - இறப்பு ஜென்ம கர்மவினைகளை குறைக்கும்

பாபாஜி கூறுகிறார் : 
" நீ ஒரு அடி தூரம் என்னை நோக்கி வந்தால், நான்  பத்தடி எடுத்து வைத்து உன்னிடம் வருகிறேன்." 

2 comments:

ram raj March 17, 2016 at 2:09 PM  

babaji is very great

ram raj March 17, 2016 at 2:30 PM  

babaji is very great

Post a Comment

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthik rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.