புதுவை சித்தர்கள்

(சித்தர்களின் வரலாறு)

மஹா அவதார் பாபாஜி உதித்த இடம் (Mahavatar babaji's Birth place )

 கடலூருக்கு  அடுத்துள்ள பரங்கிப்பேட்டை(போர்டோ  நோவோ) என்னும் இடத்தில் மஹா அவதார் பாபாஜி உதித்த இடம் உள்ளது.   

புதுவையில் இருந்து பரங்கிப்பேட்டை செல்லும் வழி. 


புதுவையில்  இருந்து சுமார் 60 கீ.மீ தொலைவு, 1 மணி 30 நிமிடத்தில் பரங்கிபேட்டையை அடைந்து விடலாம்   .mahavatar babaji ashram


mahavatar babaji ashram
mahavatar babaji ashram
                                                  இது பீடத்தின் முகப்புத்  தோற்றம்.

mahavatar babaji ashram                                   இது பாபாஜி ஐயாவின் பாத கமலங்கள்.
mahavatar babaji ashram
இந்த மரத்தின் அடியில் பாபாஜி ஐயா அமர்ந்து தவம் செய்ததாக நம்பிக்கை உண்டு. 
mahavatar babaj
                       பாபாஜி  ஐயாவிற்கு முருகப்பெருமான் ஞானம் அளித்தல்.mahavatar babajiதுன்பம் என்று வருபவர்களுக்கு, அருள் ஆசி வழங்கி இன்பம் தரும் பாபாஜி ஐயாவின் திருஉருவம்.

Sri chakra
                        பாபாஜி ஐயாவின் ஸ்ரீ சக்கரம் பாபாஜி ஐயாவின் பிறந்த நாள்(கார்த்திகை மாதம், ரோகினி நட்சத்திரம்) அன்று எடுக்கப்பட்ட படங்கள்.
mahavatar babaji ashram
பாபாஜி ஐயாவிற்கு இடப்புறம் அமைந்திருக்கும் விநாயகப்பெருமானின் உருவச்சிலை.
mahavatar babaji ashram


இவர் பெயர் க்ரியா அம்மான். பாபாஜி ஐயாவின் சீடர்.பாபாஜி ஐயாவின் சன்னதிக்கு இடப்புற தூணில் இவர் உருவம் அமைக்கப்பட்டுள்ளது.  
mahavatar babaji ashram
இவர் பெயர் அன்னை நாக லக்ஷ்மி . பாபாஜி ஐயாவின் மற்றொரு சீடர்.பாபாஜி ஐயாவின் சன்னதிக்கு வலப்புற தூணில் அன்னையின் உருவம் அமைக்கப்பட்டுள்ளது. 


mahavatar babaji
மலர்களின் நடுவில்  மகான் நமக்கு தரும் அற்புதக் காட்சி. 

mahavatar babaji
                                என் வாழ்வில் கிடைத்த மிகப்  பெரும் பாக்கியம்
                                       ( மஹா அவதார் பாபாஜி ஐயாவும், நானும்).


mahavatar babaji
                     உற்றுப்பாருங்கள் சூட்சமம் புரியும் .மஹா அவதார் பாபாஜி ஐயா கோவிலை பார்க்க இங்கே சொடுக்குங்கள் 
http://www.youtube.com/watch?v=gPp24Lbi0Gg


தீபாராதனை காட்சி
http://www.youtube.com/watch?v=cuWDUh0af0U
சிவஸ்ரீ மகான் படே சாஹிப் சித்தர் பீடம் ( Sri Bade Saheb)

Bade saheb
விழுப்புரதிலிருந்து புதுவை செல்லும் 20 கிலோமீட்டர் தொலைவில் கண்டமங்கலம் ரயில்வே கேட் உள்ளது. இதன் இடது புறத்தில் 2 கீ.மீ தொலைவில் சின்னபாபு சமுத்திரம் என்னும் சிற்றூர் உள்ளது. இங்கு மஹா சித்த புருஷரான ஸ்ரீ படே சாஹிப் சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. அனைத்து மக்களுக்கும் தன் ஜீவ சமாதியில் இருந்து அருள் வழங்கி கொண்டிருக்கும் அற்புத ஆற்றல் படைத்த சித்தர் இவர்.

ஸ்ரீ படே சாஹிப் சித்தர் அமைதியானவர். இப்புனித பெரியவர் முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர். ஆனால் மதங்களை தாண்டி அருள் செயல் புரிபவர். "படே" என்றால் பெரிய என்று பொருள். ஆதலால் மக்கள் இவரை "படே சாயபு" என்று அழைத்தனர்.

இவர் மகிழ மரத்தின் அடியில் அமர்ந்து வைத்தியம் செய்வார். மக்கள் குறைகளை கேட்டு தீராத நோய்களை தீர்த்து வைக்கும் வல்லமை கொண்டவர். பச்சிலைகளை அரைத்து நோய்களை தீர்ப்பார். விபூதியை பிரசாதமாக  கொடுப்பார். சிரசில் கைவைத்து நோயின் கொடுமையை குறைப்பார். சிறிது நேரத்தில் நோய் வந்த சுவடு தெரியாமல் பறந்து ஓடிவிடும்.
இது சித்தர் பீடத்தின் முகப்புத் தோற்றம். 


இங்கு உள்ள படங்கள் சுற்று பிரகாரத்தில் உள்ள படே சாஹிப் ஐயாவின் உருவ சிலைகள் . 
 
படே சாஹிப் ஐயாவிற்கு சமர்பிக்கப்படும் பூக்கள்,பொரி,பிஸ்கட்கள்,ஊதுபத்தி போன்ற பொருட்கள் விற்கும் இடம்.(பீடத்தின் வாசல்)
படே சாஹிப் ஐயா அவர்களால் வணங்கப்பட்ட சிவன் கோவில்
சிவன் கோவிலுக்கு வெளியில் உள்ள விருட்சத்தின் அடியில் அமைந்து இருக்கும் நாகங்களின் உருவ சிலைகள்.


 

ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் கோவில்

Guru sithanandha swamigal
பாண்டிசேரியில் மிக சிறப்பு வாய்ந்த சித்தர் ஆவார். ஏன் என்றால் இவர் சித்தர்களுக்கு எல்லாம் குரு என்று சொல்லலாம். இவர் ஜீவ சாமாதி பாண்டிச்சேரியில் முத்தியால்பேட்டையை அடுத்த கருவடிகுப்பத்தில் பாத்திமா பள்ளியின் எதிரில் உள்ளது.

இங்கு சென்றுவந்தால் பில்லி,சூனியம் எல்லாம் ஓடிவிடும், மன அமைதி கிடைக்கும்.இங்குதான்  பாண்டிசேரியில் உள்ள எல்லா சித்தர்களும் வந்து தங்கி சென்றிருகிறார்கள்.

பாரதியாரும் இங்க வந்து அடிக்கடி குயில் பாட்டு எழுதி உள்ளார். இவருக்கு குரு பூஜை வைகாசி மாதம் 15ம்  தேதி மிக சிறப்பாக நடைபெறுகிறது.
guru sithanandhar temple
guru sithanandhar temple


guru sithanandhar temple
                                           இது கோவிலின் முகப்பு தோற்றம்

guru sithanandhar temple
                                      பாரதியார் இங்கு வந்ததற்கான அடையாள சின்னம்.

guru sithanandhar
                                    ஸ்ரீ குரு சித்தானந்த சுவாமிகளின் திரு உருவம்.

guru sithanandhar temple
 இவர்கள் கம்பளி சித்தர்( இடது ) மற்றும் தொள்ளைகாது  சித்தர் (வலது ). 
guru sithanandhar temple
இவர்கள் கதிர்வேல் சுவாமிகள் ( இடது ) மற்றும் அக்கா சுவாமிகள் ( வலது ).
guru sithanandhar temple

                                   இது அக்கோவிலினுள் அமைந்திருக்கும் திருக்குளம்.

ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள்

manuruti swamigal
ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகளின் ஜீவ சமாதி புதுச்சேரி சுதேசி காட்டன் மில் எதிரில் உள்ள கோவிந்தசாமி முதலியார் தோட்டத்தில் உள்ளது. அந்த சமாதி ஒரு வீட்டின் முற்றம் போல் ஆகிவிட்டது.

இங்கு ஒரு மெக்கானிக் கடையின் பக்கத்தில் செல்லும் ஒரு ஒற்றை அடி பாதை வழியாக மட்டுமே சென்று தரிசனம் செய்யும் நிலையில் உள்ளது. இவர் தனிமையில் தன்  சிந்தனையில் மனதை ஒருநிலையில் கட்டுபடுத்தியவர்.

அப்படி கட்டு படுத்தும் பயிற்சிக்காக ஒரு கையில் தன் கட்டை விரலை மண்ணில் வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பார். இதனால் இவரை மண்ணுருட்டி சாமிகள் என்று அழைத்தனர். இவர் 1965  ம் ஆண்டு ஜனவரி மாதம் 16 -ம் தேதி ஜீவ சமாதி அடைந்தார்.

ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள்

kambali gnana desiga swamigal
கிழிந்த கருப்பு போர்வை போர்த்திய  ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகளின் உருவம். இவரது சமாதி புதுவைக்கு  மேற்கே தட்டாஞ்சாவடி தொழில்பேட்டையில்  வடக்கே உள்ளது. இவர் கொடி அருளாய் உள்ள அனைத்து மக்களையும் மந்திரித்தும், பச்சிலைகளை பூசியும், விபூதி அளித்தும் குணமாக்குவார்.

இவர் சித்தாந்த சுவாமிகளின் மறு அவதாரமோ  என்று கூட மக்கள் எண்ண தொடங்கினர். இவரது சித்து விளையாட்டை கண்ட சிலர், இவரை பலவந்தமாக கட்டிபோட்டு தங்கம் செய்யும் வித்தையை கற்று தருமாறு சவுக்கால் அடித்தனர்.     

இவர்கள் செய்ததை எல்லாம் மனதில் கொள்ளாமல் உலகில் நிலையானதையும், முக்கியமானதையும் எடுத்து கூறினார். இவர் ஒரே சமயத்தில் இரண்டு இடங்களில் காட்சி அளிக்கும் ஆற்றல் உடையவர். இவர் 21 டிசம்பர் 1874 ம் ஆண்டு முக்தி அடைந்தார்.

ஒவ்வொரு வருடமும் மார்கழி மாதம் ஆறாம் தேதி அன்று குரு பூஜை விழாவாகக் கொண்டாடப்படுகிறது. பல வருடங்களாக தொடர்ந்து ஒரே கோவிலாக இருந்து வருகிறது . .

ஸ்ரீ சுப்பரமணிய அரபில சச்சிதானந்த சுவாமிகள்

ஸ்ரீ சுப்பரமணிய அரபில சச்சிதானந்த சுவாமிகளின் பீடம் புதுச்சேரியில் உள்ள எல்லைபிள்ளைச் சாவடியில் உள்ளது. இவர் சிருங்கேரி சிவகங்கா 16 -வது மடபீடாதிபதியாக  பட்டம் சூட்ட பட்டவர். 1910 -ம் ஆண்டு சிவகங்கையில் ஒரு சாரதாம்பாள் கோவிலைக்கட்டி சாரதாம்பாள் சிலையை பிரதிஷ்டை செய்தவர். பாரதம் முழுவதும் பாத யாத்திரை செய்தவர்.

இவருடைய ஆசை தன ஜீவ  உடல் சித்தர்கள் வாழும் புதுச்சேரியில்தான் பிரிய வேண்டும் என்பதே. இதனால் இவர் எல்லோரையும் விட்டு புதுச்சேரிக்கு வந்து ஒரு மடத்தை அமைத்து அங்கு சலைவைக்கல்லினால் ஆன ஒரு சாரதாம்பாள் சிலையையும் பிரதிஷ்டை செய்து சிறிதுகாலம் தங்கினார். இங்கேயே தன் எண்ணம் போல் ஜீவ சமாதியும் அடைந்தார்.     
   

ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள்

Ram paradesi swamigal
புதுச்சேரியில் இருந்து வில்லியனூர் செல்லும் வழியில் சுல்தான் பேட்டை திருப்பத்தில் வலப்புறத்தில்  ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகளின் ஜீவ சமாதி அமைந்துள்ளது. சமாதி மேடையில் மீதுள்ள மாடத்து கற்பக அறையில் இராம பரதேசி சுவாமிகளின் திரு உருவம் அழகாக செதுக்கப்பட்டு உள்ளது.

அந்த சித்தரின் திருவுருவத்திற்குக் கீழ் உள்ள மேடையில் முன்புறத்தில் தமிழில் அமைந்த கல்வெட்டு ஒன்று பதிக்கப்பட்டு உள்ளது. தங்கள் ஊருக்கு புதிதாக சாமியார் வந்துள்ளதை கண்ட மக்கள், இவரை யார் என்று கேட்க , இவர் அவர்களுக்கு "ராம் ராம்" என்று பதில் அளித்தார். இதனால் இவரை ராமபரதேசி சுவாமிகள் என்று அழைத்தனர்.

இவர், பாம்பு கடித்து விஷம் தலைகேறி இறந்து கிடந்த விவசாயின் உடலை "ராம் ராம்" என்று அழைத்து அவனை தூங்கி எழுந்தவர் போல எழச்செய்தார். இங்கே பௌர்ணமி பூஜை, வியாழக்கிழமை குரு பூஜை ஆகியவை சிறப்பாக செய்யபடுகின்றன.

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்

ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகளின் சித்தர் பீடம் முல்லா வீதியில் உள்ளது. இவர் பல ஆண்டுகள் லால்பகதூர் சாஸ்திரி வீதியில் தங்கி இறை பிரச்சாரம் செய்தவர். இவர் சவப்பெட்டி ஊர்வலத்தில் பிரெஞ்சு கவர்னரும் கலந்து கொண்டனர் என்பது மிகச்சிறப்பு வாய்ந்தது.

இவரின் சிறப்பு, இவர் இறந்து எத்தனையோ ஆண்டுகள் ஆனபின்பும் சவப்பெட்டியை கவர்னர் திறந்து பார்க்க ஆவல் கொண்டு திறந்து பார்க்கையில் மகானின் உடல் சற்றும் அழுகாமல் இருந்தது.

இவருக்கு உகந்த நாட்கள் வியாழன் மற்றும் வெள்ளி. குரு பூஜை ஒவ்வொரு ஆண்டும் ஹஜ்பிறை 20 -ம் நாள் ஆகும்.

ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்

sivapragasa swamigal
புதுவைக்கு வடக்கே 6  கல் தொலைவில் நல்லாதூரில் சிவஞானபால தேசிகர் மேடம் உள்ளது. மடத்தினுள் குகையும், குகையினுள் விபூதி, லிங்கமாக மாறிய , விபூதிலிங்கமும் உள்ளது. வைகாசி மாதம், பௌர்ணமி திதி விசாக நட்சத்திரத்தில் மடத்தில் உள்ள குகையில் இறங்கி   ஸ்ரீ சிவப்பிரகாச  சுவாமிகள், விபூதி லிங்கமாக மாறினார். இவரது காலம்  17-ம் நூற்றாண்டு .

ஸ்ரீ சக்திவேல் பரமாந்த சுவாமிகள்

sakthivel swamigal
ஸ்ரீ சக்திவேல் பரமாந்த சுவாமிகள் சமாதி புதுச்சேரியில் முதலியார்பேட்டை காராமணிக்குப்பம் என்ற இடத்தில உள்ளது. இவர் தியானம் செய்து பராசக்தியின் உருவ தோற்றத்தில் ஆனந்தம் அடைந்தவர். இதனால் இவருக்கு அதிக அற்புத சக்திகள் உண்டு.

இதற்கு உதாரணமாக (முதலியார் பேட்டையில்) இந்த  சக்கரம் சுழலும் நேரம் வந்துவிட்டது.
இதோ இந்த இடத்தில ஒரு பெரிய துணி நெய்யும் தொழிற்சாலை உருவாக போகிறது. இதில் ஆயிரம் குடும்பம் வாழ போகிறது. மக்கள் ஏறிப்போகும் பெரிய ரயில் வண்டி ஒன்றும் வரப்போகிறது என்று சொன்ன மகான் இவர்தான்.

அவர் சொன்னது அனைத்தும் இன்று உண்மையாகிவிட்டது. குருபூஜை ஆடி 23 -ம் தேதி விமர்சையாக கொண்டாடப்படுகிறது.

ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்

kadhirvel swamigal
ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகளின் சித்தர் பீடம் புதுவை பிருந்தாவனம் பகுதியில் செல்வம் திரை அரங்குக்கு மேற்கே உள்ளது. இவர் எல்லோருக்கும் உணவு அளிப்பார். இது எல்லாருக்கும் புரியாத புதிர். இவர் பின்னாகவே  நடந்து செல்லும் ஆற்றல் உள்ளவர். இங்கு ஒவ்வொரு வியாழக்கிழமையும் சிறப்பு வழிபாடு உண்டு. ஒவ்வொரு தை பூசமும் குரு பூஜை விமர்சையாக கொண்டாடப்படுகிறது .

ஸ்ரீ தொள்ளைக்காது சித்தர்

thollai kaadhu siththar
 ஸ்ரீ  தொள்ளைக்காது சித்தரின்  ஜீவ சமாதி அவர் வணங்கிய மணக்குள விநாயகர் கோவிலுக்கு உள்ளேயே அமைந்து உள்ளது. கருவறை விநாயகருக்கு பின்புறத்தில் உள்ளது. பிரெஞ்சு மக்கள் இவரை வணங்க ஆரம்பித்து உபசரிப்பு தரிசனம் என்ற பெயரில் இவரை சந்திக்க முயன்றனர்.

இதனால் அவர் கூட்டத்தை விட்டு விலகி தனிமையை விரும்பி அருகிலிருந்த மணக்குள விநாயகர் ஆலயத்திற்கு சென்றார். அடர்ந்த தோப்பு மணற்கேணி அருகில் ஒரு பிள்ளையார் கோவில் அது. இதுவே அவருக்கு மனதில் அமைதியை தோற்றுவித்தது.

இவருக்கு பாரதியார் மணக்குள விநாயகர் மீது  பாடிய பாடல் காதில் எப்போதும் ஒலித்து கொண்டே இருக்கும். இவர் தினமும் காலையில் மணக்குள விநாயகரை பூஜை செய்வார். பின்பு மாரியம்மனை தரிசனம் செய்வார்.

இவர் சித்து வேலைகள் தொடர்ந்ததால் எப்போது எங்கு இருப்பார் என்று சரியாக யாராலும்   தெரிந்து கொள்ள முடியாது. இப்போது அவருடைய உருவ சிலை மணக்குள விநாயகர் கோவிலில் உள்ளது.

ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்

ஸ்ரீ நாகலிங்க சுவாமிகளின் ஜீவ சமாதி புதுச்சேரியில் உள்ள அம்பலத்தடையார் மடத்து வீதியில் அமைந்து உள்ளது. இவர் திருவாசகத்தை மிகவும் நேசித்து அதை மக்களுக்கு சேர்த்தவர். எல்லாருடைய மனதையும் உருக செய்வார்.

இவருடைய அற்புத செயலை பார்த்து பிரெஞ்சு அரசு இந்த தெருவிற்கு அம்பலத்தாடும் ஐயர் மடத்து வீதி என்று பெயர் சூட்டி அவரை கௌரவித்தது. இவர் வைத்திருந்த திருவாசகம் ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரி அன்று இரவு பூஜை செய்யப்படுகிறது.
குரு பூஜை ஆனி மாதம் 7 -ம் நாள் ஆகும்.

ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்

vedhanandha swamigal
வேதாந்த சுவாமிகள் 1892 -ம் ஆண்டு தோன்றியவர். இவரின் உண்மை பெயர் தாண்டவராயன். இவரது ஜீவ பீடம் முத்தியால்பேட்டை-இல் உள்ள வசந்த நகர் எதிரே திரு முத்து துரைசாமி முதலியார் தோட்டத்தில் உள்ளது.

இவர் பன்னிரெண்டாவது வயதில் திருத்தல யாத்திரை  மேற்கொண்டு விராலி மலையில் பாடம் நடத்திய ராச்கிரிப் பெரியாரிடம் சீடராக சேர்ந்து முறைப்படி திருவாசகம், பட்டினத்தார் பாடல்கள், தாயுமானவர் பாடல்கள், கீதையின் சாராம்சம் முதலிய பாடங்களை கற்று தேர்ந்தார்.

இவர் பல தலங்களுக்கு பாத யாத்திரையாக செல்வார்.இவர் தினசரி செட்டி தெருவில் உள்ள கொசியதே புரோகரசீத் அருகில் உள்ள ஒரு வீட்டில் வேதாந்தப் பாடங்களை நடத்தி சொற்பொழிவு செய்வார். இதனால் இவரை வேதாந்த சுவாமிகள் என்று அழைத்தனர்.
இந்த இடம் இப்போது அரவிந்தர் வீதியில் கல்விக் கூடமாக  இயங்குகிறது.

ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்

சிவஞானபாலய சுவாமிகள் பீடம் பொம்மையார் பாளையத்தை தலைமை இடமாக கொண்டது. இது புதுச்சேரி  நகரில் இருந்து முத்தியால் பேட்டை வழியாக புதுவை பல்கலைகழகம் செல்லும் வீதியில் உள்ளது.

அதுமட்டும் இல்லாமல்  முத்தியால் பேட்டை மாதாகோவில் வீதியில் உள்ள ஒரு மண்டபமும் இந்த ஆதீனத்திற்கு சேர்ந்த மைலம் முருகன் கோவிலும், பெருமுக்கல் கோவிலும் இந்த ஆதீனத்திற்கு உட்பட்டவை.

ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்

இந்த சித்தரின் பீடம் காலாப்பட்டு அடுத்து புத்துபட்டில் எழுந்து அருளி இருக்கும்  ஐய்யனார் கோவில் உள்ளது. இவர் சுமைதூக்கும்  தொழிலாளி ஆவார். இவரது சிறப்பு இரவு நேரத்தில் அம்பிகையுடன் உரையாடுவார்.

அவர் வேதங்களுக்கு தெளிவிக்க முடியாத சில சந்தேகங்களுக்கு விளக்கவுரை அளிப்பார். இவர் ஒரு நாள் காலை பரபரப்பான வியாபார நேரத்தில் திடீரென்று நடு ரோட்டில் அமர்ந்துவிட்டார்.

சுட்டெரிக்கும் வெயில் கொதிக்கும் தார் சாலையில் அமர்ந்துவிட்டார். யார் யாரோ அப்புறபடுத்த முயற்சி செய்தனர். அனால் அவரை அசைக்க முடியவில்லை. இப்படி இடி, வெயில், மழை என்று 18   நாள்  உண்ணாமல், உறங்காமல் அப்படியே மேனியில் எந்த மாற்றமும் இல்லாமல் இருந்து மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். இங்கு வாரா வாரம் திங்கள் கிழமை மக்கள் கூடி தரிசித்து வருகிறாகள்.         

புதுவையில் வாழ்ந்த சித்தர்கள்

1 . ஸ்ரீ மகான் படே சாஹிப்
     (சின்னபாபு சமுத்திரம், கண்டமங்கலம் -ரயில்வே கேட் 2 கீ.மீ )
2 . ஸ்ரீ லட்சுமண சுவாமிகள்
     (ECR , கீழ்புத்துப்பட்டு ஐயனார் கோவில் பின்புறம் )
3 . ஸ்ரீ சிவஞானபாலய சுவாமிகள்
     (மயிலம் முருகன்  கோவிலில்) 
4 . ஸ்ரீ குரு சித்தாந்த சுவாமிகள்
     (கருவடிக்குப்பம்,ECR  சிவாஜி சிலை அருகில்) 
5 . ஸ்ரீ வேதாந்த சுவாமிகள்
     (வசந்த் நகர், ரேஷன் கடை எதிரில், முத்தியால்பேட்டை)
6 . ஸ்ரீ அக்கா சுவாமிகள்
    (Athithi inn  பின்புறம் சாலை, வைத்திக்குப்பம்)
7 . ஸ்ரீ நாகலிங்க சுவாமிகள்
     (அம்பலத்தடையார் மடம், செட்டிகோவில் தென்புற வீதி)
8 . ஸ்ரீ அரவிந்தர்
    (மணக்குள விநாயகர் கோவில் அருகில்)
9 . ஸ்ரீ தொள்ளை காது சுவாமிகள்
     ( மணக்குள விநாயகர் ஆலயத்திற்குள்)
10. ஸ்ரீ கதிர்வேல் சுவாமிகள்
     (3 வது குறுக்குத்தெரு, பிருந்தாவனம்)
11. ஸ்ரீ சக்திவேல் பரமானந்த சுவாமிகள்
     (காரமணிக்குப்பம், பழைய கடலூர் ரோடு, ரயில்வே கேட் அருகில்)
12 .ஸ்ரீ கம்பளி ஞானதேசிக சுவாமிகள்
      (தட்டாஞ்சாவடி, தொழிற்பேட்டை)
13 .ஸ்ரீ பெரியவருக்கு பெரியவர்
      (பொன்னியம்மன் கோவில், பாக்கமுடையான்பேட்டை)   
14 .ஸ்ரீ மண்ணுருட்டி சுவாமிகள்
     ( தென்னஞ்சாலை, பஸ் ஸ்டாண்ட் அருகில்)  
15. ஸ்ரீ மௌலா சாஹிப் சுவாமிகள்
     (முல்லா வீதி, ரயில் நிலையம் அருகில்)
16. ஸ்ரீ தேங்காய் சுவாமிகள்
     (வில்லியனூர் ரயில்வே கேட் அருகில், EB எதிரில்) 
17. ஸ்ரீ ராம் பரதேசி சுவாமிகள்
     (வில்லியனூர்-சுல்தான் பேட்டை by pass பிரியும் இடத்தில்)
18. ஸ்ரீ தட்சணாமூர்த்தி சுவாமிகள்
     (பள்ளித் தென்னல், விழுப்புரம் சாலை)
19. ஸ்ரீ குருசாமி அம்மாள் சுவாமிகள்
     (அரியூர்,  விழுப்புரம் சாலை)
20. ஸ்ரீ சிவப்பிரகாச சுவாமிகள்
     (நல்லாத்தூர், ஏம்பலம்)     
21. ஸ்ரீ அழகப்பர் சுவாமிகள்
      (தென்னம்பாக்கம், ஏம்பலம்)
22. ஸ்ரீ சுப்ரமணிய அபிரல சச்சிதானந்த சுவாமிகள்
      (சாரதாம்பாள் ஆலயத்தில், இந்திரா காந்தி சிலை அருகில்)
23. ஸ்ரீ கடுவெளி சித்தர்
     (இரும்பை மாகாளம், திருச்சிற்றம்பலம் கூட்ரோடு, 2 கீ.மீ.)
24. ஸ்ரீ சடையப்பர் சாமிகள்
      (வழுதாவூர் சாலை, ராணி மருத்துவமனை அருகில் )
25. ஸ்ரீ வண்ணார பரதேசி சுவாமிகள்
      (ஒதியம்பட்டு, வில்லியனூர்-முருங்கப்பாக்கம் சாலை)
26. ஸ்ரீ மொட்டை சுவாமிகள்
     (அரியாங்குப்பம், கடலூர் சாலை)
27. ஸ்ரீ கணபதி சுவாமிகள்
      (கருவடிக்குப்பம்,எடையன்சாவடி,மாருதி பள்ளி பின்புறம்)
28. ஸ்ரீ குண்டலினி சித்தர்
     ( திருவக்கரை கோவிலில்)
29. ஸ்ரீலஸ்ரீ அருள் சக்தி அன்னை
    (பிள்ளையார்க்குப்பம், கடலூர் சாலை)              

மஹா அவதார் பாபாஜி படங்கள் ( Mahavatar Babaji pictures )

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji

mahavatar babaji
mahavatar babaji

வரவிருக்கும் முக்கிய தினங்கள்

About this blog

சித்தர்கள் நினைத்தால் விதியை கூட மாற்ற இயலும். சித்தர்கள் கால நேரத்திற்கு அப்பாற்பட்டவர்கள். எதையும் செய்யும் வல்லமை கொண்டவர்கள். நம் வாழ்க்கையில் பல அதிசயத்தை நடத்துபவர்கள் . நம்புவர்களை உடன் இருந்து காத்து, வழி காட்டுபவர்கள்.

அப்படி பட்ட சித்தர்களை பற்றி நாம் அனைவரும் அறிய உருவாக்கப்படதே இந்த இணையதளம். புதுவை மற்றும் அதனை சுற்றி உள்ள பல பகுதிகளில் சித்தர்கள் வாழ்ந்து ஜீவ சமாதி அடைந்து உள்ளனர். சுமார் 500 ஆண்டுகளுக்குள் 32 ஆத்ம ஞானிகள் வாழ்ந்துள்ளனர். அவர்களின் வாழ்க்கை மற்றும் அருளுரைகள் நம் வாழ்கைக்கு வழிகாட்டுபவையாக அமைந்துள்ளன . அவர்களுக்காக இந்த தளம் அர்பணிக்கப்படுகிறது.

மேலும் பிற பகுதிகளில் வாழ்ந்த சித்தர்களை பற்றியும் இங்கு குறிப்பிடப்படும். எங்களை வாழவைத்து வழி நடத்தி வரும், எங்கள் குரு, பெரியவர் அருள்மிகு மகா அவதார் பாபாஜி ஐயாவின் திருப்பாதம் பணிந்து இந்த சேவையை துவக்குகிறோம்.

மகான் படே சாஹிப் வரலாறு

மகான் படே சாஹிப் வரலாறு
(படத்தின் மேல் சொடுக்கவும் )

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்

மஹா அவதாரம் பாபாஜி உருவ சிலைக்கு அணுகவும்
(படத்தின் மேல் சொடுக்கவும் )

Blog Archive

Labels

About This Blog

தங்கள் கருத்துக்களை மறவாமல் பதிவு செய்யுங்கள். உங்களுடைய ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன. இந்த தளத்தைப் பற்றி மற்றவர்களுக்கும் கூறுங்கள்.

உங்களுக்கு தெரிந்த சித்தர்களை பற்றியும் எங்களுக்கு மின் அஞ்சல் அனுப்புங்கள், விரைவில் பிரசுரிக்கப்படும்....

நன்றியுடன் கார்த்திக் RVK மற்றும் செ.மாதவன்


மேலும் தொடர்புக்கு :


Email : davemathavan@gmail.com

R.V.Karthikeyan
Cell No:
+919994312344
S.Mathavan
Cell No:
+919944287310


மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

மஹா அவதார் பாபாஜி ஐயாவும், அடியேனும் (மாதவன் )

About Me

Karthikeyan rvk. and S.Mathavan
Puducherry, Puducherry, India
I'm a very calm person. My strength is my sincerity. My victory formula is "DDT"
View my complete profile

Total Pageviews

Followers

Powered by Blogger.